2026 பொங்கல் பண்டிகை எப்பொழுது? இந்த வருடம் என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் உலகத் தமிழர்களால் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாள் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு விளையாட்டு போட்டிகள், விவசாயத்தை கொண்டாடும் வகையில் நிறைய விழாக்கள் கொண்டாடப்படும்.
மேலும், இந்த திருநாளில் ஒவ்வொருவர் வீடுகளின் வாசலில் வண்ண நிறங்களில் கோலமிட்டு பொங்கல் விடுவார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த பொங்கல் பண்டிகையானது சுமார் நான்கு நாட்கள் கொண்டாடப்படும்.

அதாவது மார்கழி மாதத்தில் கடைசி நாள் போகி பண்டிகையாகவும், தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகையாகவும் அடுத்து வருகின்ற இரண்டு நாட்கள் மாட்டு பொங்கலாகவும் தை மாதத்தின் மூன்றாவது நாள் காணும் பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்த பொங்கல் பண்டிகையானது ஜனவரி 13 முதல் 15 ஆம் தேதி வரை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த 2026 புது வருடம் பிறந்து விட்டது இன்னும் சிறிது நாட்களில் பொங்கல் தினமும் வர இருக்கிறது.
அப்படியாக இந்த பொங்கல் பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும்? இந்த ஆண்டு பொங்கல் தினம் எந்த தேதியில் வருகிறது என்று முழு விவரங்களை பார்ப்போம். புது வருடம் 2026 ஆம் ஆண்டின் அடிப்படையில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் பொங்கல் வைக்க உகந்த நேரமாக அதாவது தைத்திருநாள் அன்று பொங்கல் வைக்க காலை7. 30 மணி முதல் 8.30 மணி வரை நல்ல நேரம் ஆகவும் அதன் பிறகு காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை உகந்த நேரமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
பொங்கல் பண்டிகையின் முக்கிய நோக்கமே குடும்பங்களுடன் ஒன்றிணைந்து தமிழர் திருநாளான இந்த தைத்திருநாளில் விவசாயிகளுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் குடும்பத்தோடு ஒற்றுமையாக இருந்து பண்டிகையை கொண்டாடும் விதமாகவும் பொங்கல் வைத்து கொண்டாடுகிறோம்.
அந்த நாளில் பொங்கல் பொங்கி வரும் பொழுது குடும்பங்களுடன் சேர்ந்து "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்" என்று மகிழ்ச்சியுடன் சொல்லி வந்தால் நிச்சயம் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |