வீட்டில் உள்ள கெட்ட நேரம் விலக பின்பற்ற வேண்டிய முக்கியமான 5 வாஸ்து குறிப்புகள்
வீடுகளில் வாஸ்து என்பது மிகவும் முக்கியமாக நாம் பின்பற்றக்கூடிய ஒன்றாக உள்ளது. பல நேரங்களில் வாஸ்து என்ன என்பதை சரியாக நாம் புரிந்து கொள்ள முயலும் பொழுது இருக்கின்ற இடத்தை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகவே இருக்கிறது.
அந்த வகையில் ஒருவர் குடும்பத்தில் அவர்கள் மீது சிலரின் போட்டி பொறாமைகளால் வரக்கூடிய ஆபத்துகள் கண் திருஷ்டிகள் கிரக நிலைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் போன்ற நிலைகள் விலக அவர்கள் வீடுகளில் பின்பற்ற வேண்டிய முக்கியமான வாஸ்து குறிப்புகளை பற்றி பார்ப்போம்.

1. நம்முடைய வீடுகளில் எப்பொழுதும் சூரிய வெளிச்சம் படும்படியாக ஜன்னல்களின் கதவுகளை நாம் திறந்து வைத்திருக்க வேண்டும். இயற்கையின் ஒளி நம்முடைய அறையின் மீது விழுகின்ற பொழுது அதனுடைய தாக்கத்தால் வீடுகளை சூழ்ந்து இருக்கக்கூடிய தீய ஆற்றலானது விலகும்.
2. குடும்பத்துடன் ஏதேனும் ஒரு சுப காரியங்களில் கலந்து கொண்டு வீடு திரும்பிய பொழுது நிச்சயமாக அன்றைய இரவு திருஷ்டி சுற்றி போட வேண்டும்.
அதாவது கல் உப்பு, கடுகு, காய்ந்த மிளகாய், கற்பூரம் போன்றவை எடுத்துக்கொண்டு குடும்பத்தினரை அமரச் செய்து குடும்பத்தின் இருக்கக்கூடிய தலைவர் ஒவ்வொருவருக்கும் மூன்று முறை திருஷ்டி சுற்றி எரிக்க வேண்டும். இது நிச்சயம் ஒரு நல்ல பலனை நமக்கு கொடுக்கும்.
3. அதோடு வீடுகளில் கல் உப்பு பரிகாரமும் நாம் அவ்வப்போது செய்ய வேண்டிய ஒரு அவசியம் இருக்கிறது. குளிக்கும் பொழுது சிறிதளவு கல் உப்பு போட்டு குளித்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

அப்படி இல்லை என்றால் ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பு நிரப்பி வீடுகள் இருக்கக்கூடிய மூலையில் வைத்து விட வேண்டும். இதுவும் வீடுகள் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை மொத்தமாக அகற்றி விடு.
4. வீட்டினுடைய நுழை வாயில் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஆதலால் அந்த நுழைவாயிலை நாம் எப்பவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதில் தூசி படியாமல் பார்த்து கொள்வது அவசியம்.
5. தினமும் ஒரு முறையாவது வீடுகளில் மந்திரங்களை நாம் ஒலிக்க செய்ய வேண்டும். இறைவனுடைய மந்திரங்கள் எதுவாக இருந்தாலும் காலை மாலை என்ற ஒரு நேரத்தில் மந்திரம் ஒலிக்க செய்வது எதிர்மறையாற்றல் உள்ளே நுழையாமல் முற்றிலுமாக தடுத்துவிடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |