2026-ல் சிவபெருமான் அருள் பெற இந்த நாட்களை எல்லாம் தவற விடாதீர்கள்
சிவபெருமான் வழிபாடுகளில் பிரதோஷ வழிபாடு மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்த பிரதோஷ நாளில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நிச்சயம் நமக்கு பல்வேறு வகையான நன்மைகள் நம் வாழ்க்கையில் கிடைக்கிறது.
அதாவது பிரதோஷ வழிபாடுகளிலும் பூஜைகளிலும் கலந்து கொள்ளும் பொழுது தொடர்ந்து தாமதங்கள் இருந்தால் நிச்சயம் சிவபெருமானுடைய அருளால் நமக்கு ஒரு நல்ல வழி பிறக்கும். அப்படியாக உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் உங்களுடைய தடைகள் எல்லாம் விலக வேண்டும் என்று எண்ணினால் நிச்சயம் இந்த பிரதோஷ நாளில் நீங்கள் வழிபாடு செய்வது மிகவும் அவசியமாக இருக்கிறது.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு எந்த மாதங்களில் எந்த தேதிகளில் பிரதோஷம் வருகிறது என்பதை பற்றி முழுமையாக பார்ப்போம்.

2026 ஆண்டு பிரதோஷ விரத நாட்கள்:
| ஆங்கில தேதி | தமிழ் தேதி | கிழமை |
ஜனவரி 01 ஜனவரி 16 ஜனவரி 30 | மார்கழி 17 தை 02 தை 16 | வியாழன், வெள்ளி, வெள்ளி |
| பிப்ரவரி 14 | மாசி 02 | சனி |
மார்ச் 01 மார்ச் 16 மார்ச் 30 | மாசி 17 பங்குனி 02 பங்குனி 16 | ஞாயிறு திங்கள் திங்கள் |
ஏப்ரல் 15 ஏப்ரல் 29 | சித்திரை 02 சித்திரை 16 | புதன் புதன் |
மே 14 மே 28 | சித்திரை 31 வைகாசி 14 | வியாழன் வியாழன் |
ஜூன் 12 ஜூன் 27 | வைகாசி 29 ஆனி 13 | வெள்ளி சனி |
ஜூலை 12 ஜூலை 26 | ஆனி 28, ஆடி 10 | ஞாயிறு, ஞாயிறு |
ஆகஸ்ட் 10, ஆகஸ்ட் 25 | ஆடி 25, ஆவணி 09 | திங்கள், புதன் |
செப்டம்பர் 08, செப்டம்பர் 24 | ஆவணி 22, புரட்டாசி 07 | செவ்வாய், வியாழன் |
அக்டோபர் 08, அக்டோபர் 23 | புரட்டாசி 21, ஐப்பசி 06 | வியாழன், வெள்ளி |
நவம்பர் 06, நவம்பர் 22 | ஐப்பசி 20, கார்த்திகை 06 | வெள்ளி, ஞாயிறு |
டிசம்பர் 06, டிசம்பர் 21 | கார்த்திகை 20, மார்கழி 06 | ஞாயிறு, திங்கள் |
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |