இந்த 5 விஷயங்களை செய்தால் கர்ம வினையில் இருந்து விடுதலை பெறலாம்

By Sakthi Raj Feb 07, 2026 05:28 AM GMT
Report

இந்த உலகம் கர்ம வினை என்கின்ற ஒரு கட்டமைப்பில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பூமியில் பிறந்த எல்லா உயிரினங்களும் அவர்களுக்குரிய கர்மாவை சுமந்துதான் இந்த பிறவியை எடுத்திருப்பார்கள்.

அப்படியாக இந்த பிறவியில் அவர்களுடைய கர்ம வினை ஆனது அவர்களுக்கு பல்வேறு விதமான தாக்கங்களை அவர்கள் வாழ்கின்ற நேரத்தில் கொடுத்து கொண்டு இருக்கும்.

கடினமான காலங்களில் ஏன் எனக்கு இது நடக்கிறது என்று மனம் இன்னும் அதிக அளவில் துன்பத்தை தழுவி விடும். அப்படியாக, செய்யாத தவறுக்கு இந்த பிறவியில் தண்டனை அனுபவிக்க கூடிய நிலையின் பெயர் தான் கர்ம வினை ஆகும்.

அந்த வகையில் எந்த பிறவியில் செய்த பாவங்களாக இருக்கட்டும் அதிலிருந்து விடுபட இந்த பிறவியில் நாம் கடைபிடிக்க வேண்டிய ஐந்து விஷயங்களை பற்றி பார்ப்போம். இதை செய்தால் நிச்சயம் கர்மவினையில் இருந்து நாம் முற்றிலுமாக விடுபடலாம்.

இந்த 5 விஷயங்களை செய்தால் கர்ம வினையில் இருந்து விடுதலை பெறலாம் | 5 Easy Ways To Reduce Your Karmic Debts

பாபா வாங்கா: 2026-ல் கட்டாயம் இது நடக்குமாம்? என்ன தெரியுமா?

பாபா வாங்கா: 2026-ல் கட்டாயம் இது நடக்குமாம்? என்ன தெரியுமா?

1. கர்ம வினை ஆனது எதற்காக நமக்கு இது நடக்கிறது என்பதை மிகத் தெளிவாக அவ்வபோது அறிகுறியாக காட்டிக் கொண்டிருக்கும். ஆனால் அதை நாம் பார்க்க தவறி இருப்போம். அப்படியாக உங்கள் வாழ்க்கையில் நடக்கக்கூடிய துயரங்கள், துன்பங்கள், இழப்புகள் என்று எல்லாவற்றுக்கும் ஒரு தொடர்பு இருக்கும். அதை நீங்கள் தொடர்புபடுத்தி புரிந்து கொள்ளும் பொழுது நிச்சயம் உங்கள் துன்பத்திலிருந்து விடுதலை பெறலாம்.

2. எந்த காலத்திலும் யார் வேண்டுமானாலும் உங்களை கஷ்டப்படுத்தி இருந்தாலும் நீங்கள் அதை மன்னிக்க பழகிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நடக்கின்ற நிகழ்வுகளை நீங்கள் எப்பொழுது ஏற்றுக் கொண்டு அதை கடந்து செல்லவும் அதை மன்னித்து பழகவும் முயல்கிறீர்களோ அப்பொழுது உங்கள் வாழ்க்கை வளமாக மாறும்.

3. கர்ம வினைகளிலிருந்து நீங்கள் முற்றிலும் விடுதலை பெற உதவி பிறருக்கு செய்ய பழகுங்கள். மனதார ஒருவருக்கு அவர்களுடைய நிலைமை அறிந்து ஆறுதலாகவும் உதவியாகவும் இருந்தாலும் கர்மவினை குறையும்.

இந்த 5 விஷயங்களை செய்தால் கர்ம வினையில் இருந்து விடுதலை பெறலாம் | 5 Easy Ways To Reduce Your Karmic Debts

வீடுகளில் வேல் பூஜை இப்படி செய்தால் அதிர்ஷ்டம் தேடி வருமாம்

வீடுகளில் வேல் பூஜை இப்படி செய்தால் அதிர்ஷ்டம் தேடி வருமாம்

4. தியானம் செய்து பழக வேண்டும். தியானம் செய்யும் பொழுது நம் மனமானது அமைதி பெறுகிறது. இறைவனை மனதில் நிறுத்தி தியானம் செய்யும் பொழுது ஆன்மா மேன்மை அடைகிறது. நம் ஆன்மா மேன்மை அடையும் பொழுது கர்ம வினை பாதி குறைந்து விடுகிறது.

5. பற்றின்மையோடு வாழ பழகிக் கொள்ள வேண்டும். பெயர், புகழ், செல்வாக்கு உறவுகள், துரோகம், கோபம் என்று பற்றுதலோடு வாழ்வதை காட்டிலும் பற்றின்மையோடு நாம் இந்த உலகத்தில் வாழ பழகிக்கொள்ளும் பொழுது இந்த கர்மவினை ஆனது நம்மை எதுவும் செய்ய முடியாது.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US