2026 ராகு பார்வை: இந்த 3 ராசிகள் ஆகஸ்ட் மாதம் கொடிகட்டி பறக்க போகிறார்கள்..
ஜோதிடத்தில் நிழல் ரகமாக இருக்கக்கூடிய ராகுபகவான் ஆகஸ்ட் இரண்டாம் தேதி சதய நட்சத்திரத்தில் இருந்து அவிட்ட நட்சத்திரத்திற்கு இடம் மாறுகிறார்.
ராகுவின் இந்த இடமாற்றம் இந்த ஆண்டில் நடக்கக்கூடிய முதல் அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த இடமாற்றம் எந்த ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் பொற்காலத்தை ஆகஸ்ட் மாதம் முதல் கொடுக்கப் போகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:
ராகுவின் நட்சத்திர இடமாற்றமானது இவர்களுக்கு மிகவும் கலவையான பலன்களை கொடுக்கப் போகிறது. இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு எதையும் சரியாக முடிவு எடுக்கக் கூடிய பக்குவம் கிடைக்கும்.நினைத்த காரியங்கள் இவர்களுக்கு எளிதாக வெற்றியைப் கொடுக்கும். பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இவர்கள் உடனடியாக விடுபடக்கூடிய அமைப்பு உண்டாகும். வேலையில் புதிய பொறுப்புகள் இவர்களை தேடி வரும். குடும்பத்தில் திடீர் சுபகாரிய நிகழ்ச்சிகளால் இவர்கள் மன மகிழ்ச்சி அடைய போகிறார்கள்.
கன்னி:
ராகுவின் நட்சத்திர இடமாற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகுந்த சுப பலன்களை கொடுக்கப் போகிறது. இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு நீண்ட நாட்கள் வரவிருந்த பணம் மற்றும் இரண்டாம் திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வாழ்க்கை வரன், பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம், பூர்வீக சொத்துக்களில் அணுகூலம், புதிய நிலம் வீடு வாங்கக்கூடிய யோகம், வேலையில் புதிய பொறுப்புகள் ஆகியவை இந்த காலகட்டங்களில் இவர்களை தேடி வரும்.
தனுசு:
ராகுவின் நட்சத்திர இடமாற்றம் இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் பிள்ளைகளால் நல்ல அனுகூலம் கிடைக்கப்போகிறது. தொழில் ரீதியாக முன்னேற்றம், கல்விக்காக இவர்கள் திடீர் வெளியூர் பயணம், உடன் இருப்பவர்களை பற்றிய நல்ல புரிதல், எதையும் திட்டமிட்டு அதில் வெற்றி பெறக்கூடிய சாத்தியம், நீண்ட நாள் இடம் விற்பனைக்கு வரவில்லை என்று வருந்துபவர்களுக்கு நல்ல விலைக்கு இடம் விற்பனையாக கூடிய வாய்ப்புகள், மனதில் புதுவிதமான சிந்தனை எதையும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியம் ஆகியவை பெறப்போகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |