2026: மிதுன ராசியின் தலையெழுத்தை மாற்றப்போகும் ராகு கேது பெயர்ச்சி..

By Sakthi Raj Nov 20, 2026 10:00 AM GMT
Report

2026 ஆம் ஆண்டு பராபக வருடத்தில் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நவம்பர் 13 ஆம் தேதி அன்றும், திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் டிசம்பர் 5ஆம் தேதி அன்று ராகு கேது கிரகங்களினுடைய பெயர்ச்சிகள் நடைபெறுகிறது.

இதில் ராகு கும்பத்திலிருந்து மகரத்திற்கும், கேது சிம்மத்தில் இருந்து கடகத்திற்கும் பெயர்ச்சியாகிறார், அந்த வகையில், இந்த பெயர்ச்சியானது மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகிறது என்று தெரிந்து கொள்வோம்.

2026: மிதுன ராசியின் தலையெழுத்தை மாற்றப்போகும் ராகு கேது பெயர்ச்சி.. | 2026 Raghu Ketu Transit For Gemini Predictions

மிதுனம்:

மிதுன ராசிக்கு எட்டாம் இடத்தில் ராகுவும் இரண்டாம் இடத்தில் கேதுவும் இருக்கக்கூடிய காலகட்டமாகும். இதனால் வாக்கில் நிதானமும் கவனமும் இருந்தால் கெட்டவை நீங்கி நல்ல விஷயங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

வேலையில் செய்யக்கூடிய இடங்களில் உங்களுடைய திறமைக்கேற்ப உயர்வுகளை பெறுவீர்கள். அதேசமயம், எதையும் திட்டமிட்டு அதில் கவனமாக இருந்தால் மட்டுமே நன்மைகள் கிடைக்கும். அதே போல், உயர் அதிகாரிகள் உடைய ஆதரவும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். உடன் இருப்பவர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும்.

2026: மிதுன ராசியின் தலையெழுத்தை மாற்றப்போகும் ராகு கேது பெயர்ச்சி.. | 2026 Raghu Ketu Transit For Gemini Predictions

2026: நவம்பர் 2 புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது

2026: நவம்பர் 2 புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது

இந்த சமயங்களில் உங்கள் மனதில் இருந்து வந்த கசப்புகளை நினைத்து யாரிடமும் பழிவாங்கக் கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ள வேண்டாம் பாதகமாக அமைந்துவிடும். எந்த நேரங்களிலும் வார்த்தைகளில் கடுமையான சொற்களை பயன்படுத்துவதை நிறுத்தி விடுங்கள்.

வீடுகளில் இனிமையான சூழல் காணப்படும். அசையா சொத்துக்கள் வந்து சேரும். வாரிசுகளால் திடீர் யோகம் வந்து உண்டாகும். சுபகாரிய தடைகள் படிப்படியாக விலகும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல், செய்யும் வேலைகளில் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டு வர்த்தகங்களில் நேரடியாக கவனத்தை செலுத்துவீர்கள். மாணவர்களுக்கு இந்த காலகட்டம் மதிப்பு உயரும். தேவையில்லாத நட்புகளை உடனடியாக நீக்கினால் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

வாகனத்தில் செல்லும் பொழுது மிகுந்த கவனம் வேண்டும். குலதெய்வ வழிபாட்டை சரியாக பின்பற்றி வருவது நல்லது.       

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US