பரணி தீபம்: இந்த 5 விளக்குகளை ஏற்றினால் இத்தனை சிறப்புகளா? வீட்டில் எங்கு ஏற்ற வேண்டும்?
கார்த்திகை மாதம் மிக முக்கியமான மாதமாக இருக்கிறது. அந்த நாட்களில் நம் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில், பரணி தீபம் அன்று வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? எந்தெந்த இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும்? எந்த முறையில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
பரணி தீபம் :
கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பரணி நட்சத்திரத்தன்று வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்வது பரணி தீப வழிபாடு ஆகும். அதாவது இந்த உலகத்தில் நாம் வாழக்கூடிய காலத்தில் மட்டுமல்லாமல் மேல் உலகிலும் நமக்கு அளவில்லாத நன்மைகளை தரக்கூடியது இந்த பரணி தீப வழிபாடு.
பொதுவாகவே, கார்த்திகை விரதம் இருப்பவர்கள் பரணி நட்சத்திரத்திலேயே அவர்களுடைய விரதத்தை துவங்க வேண்டும் என்பது ஐதீகமாக இருக்கிறது. கார்த்திகை மாதத்தில் பரணி மற்றும் கார்த்திகை ஆகிய இரண்டு நட்சத்திரங்களிலும் விரதம் இருப்பதற்கு மிகவும் சிறப்பானதாக இருக்கிறது.

பரணி, கார்த்திகை விரதம் இருக்கும் முறை :
பரணி நட்சத்திரம் வருகின்ற நாளில் அதிகாலை எழுந்து குளித்து விரதத்தை துவங்க வேண்டும். பிறகு நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடிந்தால் கட்டாயமாக இருக்கலாம். உடல் ஆரோக்கியத்தை பொறுத்து விரதத்தை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.
அப்படி இயலாதவர்கள் பரணி நட்சத்திரம் வருகின்ற நாளில் காலையில் மட்டும் உணவு எடுத்துக் கொள்ளலாம். பரணி அன்று பகல் மற்றும் இரவில் பால், பழம் ஆகியவை எடுத்துக் கொள்ளலாம். இதுவும் ஒருவருடைய உடல் நிலை பொருத்து அமைகிறது.
பிறகு மறுநாள் கார்த்திகை அன்று முழுவதுமாக உபவாசம் இருந்து வழிபாடு செய்யலாம். இரண்டு நாட்கள் விரதம் மேற்கொள்ள முடியாது என்பவர்கள் கார்த்திகை தினத்தன்று எளிமையான உணவுகளை எடுத்துக் கொண்டு விரதத்தை மேற்கொள்ளலாம்.
பரணி அன்று வீட்டில் விளக்கேற்ற காரணம் :
பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிர பகவான் ஆகிறார். ஐதீகப்படி அதி தேவதை எமதர்மராஜா ஆவார். அதாவது, நம்முடைய காலமான முன்னோர்கள் எமலோகத்தில் எந்தவிதமான பயமும் துன்பமும் சந்திக்காமல் இருப்பதற்கும் நாமும் எந்த விதமான எம துன்பம் இல்லாமல் இருக்கவும் கார்த்திகை மாதம் பரணி அன்று பரணி தீபம் ஏற்றுகின்றோம்.
இது நமக்கு துன்பம் இல்லாத மரணமும் மோட்சம் பெற வேண்டும் என்பதற்காகவும் நம்முடைய முன்னோர்கள் செய்த பாவங்களில் இருந்து விடுபட்டு முக்தியை அடைவதற்காக திருக்கார்த்திகைக்கு முந்தைய நாள் எமதர்மராஜாவை வேண்டிக் கொண்டு பரணி தீபம் ஏற்றுகின்றோம்.

பரணி தீபம் எந்த இடத்தில் ஏற்ற வேண்டும்:
பரணி தீபமன்று வீட்டு வாசலில் மட்டுமல்லாமல் வீடு முழுவதும் விளக்கேற்றலாம். கார்த்திகை மாதம் முழுவதும் வீட்டு வாசலில் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம்.
திருக்கார்த்திகை முந்தைய நாளான பரணி நட்சத்திரம் அன்று வீடு முழுவதும் விளக்கேற்ற துவங்கி விடலாம். வீட்டு வாசல், நிலை வாசல், பூஜை அறையான எல்லா இடங்களிலும் விளக்கேற்றலாம்.
பரணி தீபம் ஏற்றும் முறை:
ஒரு தாம்பாலத்தை எடுத்துக் கொண்டு அதில் 5 அகல் விளக்குகளை வெளிப்புறமாக பார்த்தபடி ஏற்ற வேண்டும். பிறகு ஒவ்வொரு விளக்கும் ஒவ்வொரு திசையை நோக்கி இருக்கும் படி வைக்க வேண்டும். ஒவ்வொரு தீபத்திற்கு முன்பு ஒரு மலர் வைத்து ஏற்ற வேண்டும். ஐந்து விளக்குகளும் நெய் விளக்காக இருப்பது நல்லது.
நெய் என்பது மகாலட்சுமி அருளை வீட்டில் அதிகரித்து பெற்றுக் கொடுக்கும். அஷ்டலட்சுமியின் அருளை ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது. மேலும், இந்த ஐந்து விளக்குகளும் இறைவனுடைய பஞ்சபூத தத்துவத்தை விளக்குவதாகும்.
பிறகு இந்த ஐந்து விளக்குகளையும் ஏற்ற பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இந்த ஐந்து விளக்குகள் ஏற்றியதை அடுத்து பூஜை அறையில் வழக்கமாக ஏற்றக்கூடிய விளக்குகளை ஏற்ற வேண்டும்.
பரணி தீபம் 2026 தேதி, நேரம் :
பரணி தீபம் 2026 தேதி - நவம்பர் 23 திங்கள்பரணி நட்சத்திரம் துவக்கம் - நவம்பர் 23 அதிகாலை 03.20பரணி நட்சத்திரம் நிறைவு - நவம்பர் 24 அதிகாலை 02.21பரணி தீபம் ஏற்ற வேண்டிய நேரம் - நவம்பர் 23 மாலை 6 மணிக்கு மேல் பிறகு விளக்கேற்றலாம்
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |