2026: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன? கன்னி ராசிக்கு டிசம்பர் மாத முழு பலன்கள்
2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கன்னி ராசிக்கான மாத பலன்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட ராம்ஜி சுவாமிகள் அவர்கள். அதைப் பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம். டிசம்பர் மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு ஒரு திருப்புமுனையாகவே அமைய போகிறது.
இவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேரக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சண்டைகள் தீரும், ராகு ஐந்தாம் இடத்தில் இருப்பதால் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
அதேபோல், அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உடைய பாராட்டுகளை பெறக்கூடிய அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் இவர்கள் புதிய பதவிகள் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

வெளிநாடு தொடர்பான கல்வி முயற்சிகள் மற்றும் பயணம் செய்யக்கூடிய கனவுகளும் நிறைவேறும். இருப்பினும் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது அவசியமாகும். நடைப்பயிற்சி நல்ல பழக்கவழக்கங்களை மேற்கொள்வது சிறப்பானது.
இவர்களின் இந்த காலகட்டங்களில் குரு பகவானை வழிபாடு செய்வதும் ஆலங்குடி அல்லது சென்னையில் இருக்கக்கூடிய குரு தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வதும் சிறப்பானதாகும். தீய நண்பர்களிடம் சற்று இந்த காலகட்டங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தேவையில்லாத சர்ச்சைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட ராம்ஜி அவர்கள், அதை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |