எதிரிகளைக் கண்டு அஞ்சாத குணம்… ஆறாம் இடத்து சனி தரும் முக்கிய பலன்கள்
ஜோதிடத்தில் சனி பகவான் கர்ம காரகனாக திகழ்கிறார். இவர் இருக்கும் இடம் பொறுத்து பலன்கள் மாறுபடுகிறது. அப்படியாக, லக்கினத்தில் இருந்து சனி பகவான் ஆறாம் பாவத்தில் அமர்ந்திருந்தால் அதற்குரிய பலன்கள் என்னவென்று பார்ப்போம்.
பொதுவாகவே, ஜோதிடத்தில் ஆறாம் பாவம் என்பது ருணம், ரோகம், சத்ரு வழக்கு வேலை சேவை ஆகியவற்றை குறிக்கும். இந்த இடத்தில் சனி அமரும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் வருகின்ற பிரச்சனையை உழைப்பாலும் பொறுமையாலும் எதிர்கொண்டு வெற்றி பெறக்கூடிய தன்மை உருவாகின்றது.
ஆறாம் இடம் என்பது வேலை மற்றும் சேவையை குறிப்பதால் இந்த இடத்தில் கடின உழைப்பு தேவைப்படும் வேலைகளில் இவர்கள் ஈடுபடுவார்கள்.

ஒருவர் தவிர்க்கக்கூடிய பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டு செய்து முடிக்க கூடியவர்களாக இருப்பார்கள். ஆறாம் இடம் என்பது உபசய ஸ்தானம் என்பதால் காலப்போக்கில் வளர்ச்சியை தரக்கூடிய இடமாகும்.
இவர்களுக்கு ஆரம்ப காலகட்டங்களில் வேலையில் சிறிய சிரமங்களை சந்தித்தாலும் அனுபவம் திறமையும் அதிகரிக்கும் பொழுது இவர்களுக்கு நிலையான முன்னேற்றம் கிடைக்கிறது. அதேபோல், சனி எதிரிகளை குறிக்கும் ஆறாம் இடத்தில் இருப்பதால் எதிரிகளை சந்தித்தாலும் எளிதில் பின்வாங்க மாட்டார்கள்.
இவர்கள் அவசரமாக போராடுவதை காட்டிலும் அமைதியாக திட்டமிட்டு எதிரிகளை வெல்லக்கூடிய திறன் கொண்டிருப்பார்கள். அரசு வேலை, காவல்துறை, நீதித்துறை, தொழிலாளர் நலத்துறை, கணக்கு தணிக்கை, நிர்வாக பணிகள் போன்ற பொறுப்புகள் கட்டுப்பாடு தேவைப்படும் துறைகளில் ஈடுபாடு ஏற்படும்.
இவர்களுக்கு ஆறாம் இடம் கடன் ஸ்தானம் என்பதால் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டாலும் சனியின் தன்மைகள் கடனை தவணைத் தவணையாக உழைத்து திருப்பி செலுத்தக்கூடிய பொறுப்புணர்வும் இருக்கும். இவர்களுக்கு வேலை செய்யக்கூடிய இடத்தில் உழைப்பிற்கான அங்கீகாரம் உடனடியாக கிடைக்காவிட்டாலும்.

நீண்ட காலத்திற்குப் பிறகும் மதிப்பும் நம்பிக்கையும் கிடைக்கும். இவர்களுக்கு எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அவர்களை பற்றிய பயம் குறைவாகவே இருக்கும். பொதுவாக, இவர்களுக்கு வெளிப்படையாக போட்டி போடுபவர்களை விட மறைமுகமாக தொந்தரவு செய்பவர்களால் மன உளைச்சல் சற்று அதிகமாக இருக்கும்.
ஆக, சனி பகவான் ஆறாம் இடத்தில் இருப்பது என்பது எல்லா விஷயங்களிலும் தீமையை மட்டும் தரும் என்று சொல்லிவிட முடியாது. காலம் செல்ல செல்ல எதிர்ப்புகளை வெல்லக்கூடிய சக்தி கடின உழைப்பால் உயர்வு, கடன் பிரச்சனைகளை சமாளிக்க கூடிய திறன் கொடுக்கும். ஆரம்பகாலகட்டம் போராட்டமாக இருந்தாலும் அனுபவத்தால் நிலையான உறுதியான நிலையை அடைவார்கள்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |