2026-ல் நடக்கும் ராகு பெயர்ச்சி- 100 ஆண்டு பிறகு தூள் கிளப்ப போகும் 3 ராசியினர்
ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதக்கூடிய ராகு பகவான் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் ராகு பெயர்ச்சியானது எந்த ராசிகளுக்கு நன்மையை செய்யப்போகிறது?
அதாவது இந்த ராகு பெயர்ச்சியினால் நீண்ட நாட்களாக குழப்பத்தில் இருப்பவர்களுக்கு அதிலிருந்து விடுபடக்கூடிய ஒரு ஆற்றலையும் பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலைக்கு செய்ய செல்லக்கூடிய ஒரு வாய்ப்பையும் கொடுக்க இருப்பதாக சொல்கிறார்கள். அப்படியாக, 2026-ல் நடக்கக்கூடிய ராகு பெயர்ச்சி எந்த ராசிகளுக்கு நன்மையை செய்ய இருக்கிறது என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசிக்கு ராகு பெயர்ச்சியானது இவர்களுக்கு தொழில் ரீதியாக நிறைய வாய்ப்புகளை தேடி கொடுக்கப்போகிறது. ஆன்மீக ரீதியாகவும் இவர்கள் நிறைய ஈடுபாடு செலுத்த போகிறார்கள். நீண்ட நாளாக தொழில் தொடங்க வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சிலர் குடும்பங்களுடன் வெளியூர் மற்றும் சுற்றுலா பயணம் செல்லக்கூடிய ஒரு அற்புதமான மற்றும் மகிழ்ச்சியான வாய்ப்பை ராகு பகவான் ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறார்.
துலாம்:
துலாம் ராசிக்கு ராகு பெயர்ச்சியானது இவர்களுடைய தடைகளில் இருந்து விடுபடக்கூடிய ஒரு அற்புதமான ஆற்றலை கொடுக்கப் போகிறார். நீண்ட நாட்களாக சேமிப்பு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல சேமிப்பு உருவாகும். குடும்பத்தில் பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு நல்ல முடிவை கொடுக்கக்கூடிய காலகட்டம். போட்டி தேர்வுகளுக்கு தயாராக கூடிய மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும்.
கும்பம்:
கும்ப ராசிக்கு ராகு பெயர்ச்சியானது ஒரு நீண்ட நாள் லட்சியத்தை நிறைவேற்ற உதவியாக இருக்கப்போகிறது. இவர்களை அறியாமல் நிறைய நல்ல வாய்ப்புகள் இவர்கள் பெறப்போகிறார்கள். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடிய காலகட்டமாகும். மாணவர்கள் நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல காத்திருக்கிறார்கள். காதல் உறவுகளிலிருந்து சிக்கல்கள் எல்லாம் விலகி மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |