2026: ஏப்ரல் மாதம் தூள் கிளப்ப போகும் தனுசு ராசியினர்.. முழு பலன்கள் இதோ
ஜோதிடத்தில் கிரக மாற்றங்கள் தான் நம்முடைய மனநிலையில் இருந்து தனிநபர் வாழ்க்கை வரை மிகப்பெரிய மாறுதலை கொடுக்கிறது. அப்படியாக 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனுசு ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.
ஏப்ரல் மாதம் தனுசு ராசிக்கு நல்ல மாதமாகவே அமையப்போகிறது. அதாவது எதிர்பாராத அளவு மிகப்பெரிய உயரத்தை இவர்கள் அடையப்போகிறார்கள். அது மட்டும் இல்லாமல் வேலையில் யாரும் எதிர்பாராத அளவிற்கு டபுள் ப்ரோமோஷன் இவர்கள் பெறப் போகிறார்கள்.
இருப்பினும் இவர்கள் இந்த மாதம் அறுவை சிகிச்சை போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. இந்த மாதம் இவர்களுக்கு தலைமைத்துவ பண்பு சிறப்பாக இருக்கும். இருப்பினும் தனுசு ராசிக்கு ஏப்ரல் 8 முதல் 21ம் தேதி வரை நேரம் சரியாக இல்லாத காரணத்தினால் இவர்கள் தேவை இல்லாத சில விஷயங்கள் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
கடன் வாங்குவது இவர்கள் முற்றிலுமாக தவிர்க்க விட வேண்டும். ஏதேனும் வண்டி வாகனங்களை பத்திரத்தை அடகு வைத்து கடன் வாங்குவது, போன்றவற்றை இவர்கள் ஈடுபடக்கூடாது.
அதேபோல் தனுசு ராசிக்கு இந்த காலகட்டங்களில் வேறு ஒரு இடத்தில் இருந்து வேலை பார்ப்பதற்கான வாய்ப்புகள் வருகிறது என்றால் உடனடியாக முடிவு எடுக்காமல் அடுத்த மாதம் தள்ளிப்படுவது நன்மை என்று சொல்லப்படுகிறது.
அப்படியாக 2026 ஆம் ஆண்டு தனுசு ராசிக்கு இன்னும் அந்த மாதம் எப்படி இருக்க போகிறது என்று விரிவான பலனை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிட ராம்ஜி அவர்கள்.
அதைப் பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |