2026: தனுசு ராசிக்காரர்களுக்கு மே மாதம் எப்படி இருக்கப்போகிறது?

By Sakthi Raj May 01, 2026 07:43 AM GMT
Report

 மே மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த மாதமாகவே இருக்கப்போகிறது. இந்த மாதத்தில் இவர்கள் எதிர்பாராத விதமாக புகழை பெறப்போகிறார். இருப்பினும் தொழில் ரீதியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் இந்த மாதத்தை பயன்படுத்தி இடமாற்றம் செய்து கொள்ளலாம்.

ஜூன் மாதம் பிறகு குரு பகவான் மறைவு ஸ்தானத்திற்கு செல்வதால் பிறகு வேலை மாற்றம் செய்வதில் மிக சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை வரும்.

மேலும், நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லை என்று வருத்தப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு கட்டாயம் நற்செய்தி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிதாக திருமணமானவர்களுக்கும் விரைவில் குழந்தை வரம் கிடைப்பதற்கான யோகம் உண்டாகும்.

அதேபோல் சொத்து விவகாரங்களில் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடக்கூடிய ஒரு அற்புதமான காலமாகவும் இந்த மே மாதம் உள்ளது.

2026: சித்ரா பௌர்ணமி அன்று என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது?

2026: சித்ரா பௌர்ணமி அன்று என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது?

வெளி மாநிலங்களில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு சொந்த ஊரில் அவர்கள் நினைத்தது போல் வேலை கிடைக்க கூடிய யோகம் உண்டாகும்.

பொருளாதாரத்தில் அவ்வப்பொழுது சிக்கலை சந்தித்தாலும் அதிலிருந்து விடப்படக்கூடிய யோகத்தை உச்சம் பெற்ற சூரியன் கொடுப்பார். அப்படியாக, மே மாதம் தனுசு ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று அந்த காணொளியில் பார்ப்போம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US