2026: தனுசு ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் நினைத்ததெல்லாம் நடக்கப்போகிறது

By Sakthi Raj Oct 23, 2026 04:32 AM GMT
Report

ஜோதிட ரீதியாக குருபகவானின் ஆதிக்கத்தை கொண்ட தனுசு ராசியினர் ஒரு ஆளுமை பண்போடு திகழக்கூடியவர்களாக இருக்கிறார்கள். ஒரு சுதந்திர மனப்பான்மை எப்பொழுதும் இவர்களிடத்தில் நாம் பார்க்கலாம்.

அந்த வகையில், இவர்களுக்கு குரு பகவான் எட்டாம் வீட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு மாறுவது இவர்கள் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்க போகிறது. ஐந்தாம் வீட்டின் அதிபதி செவ்வாய் 9 ஆம் வீட்டில் குருவுடன் இணைந்திருப்பதால் இவர்களுக்கு ஒரு சிறந்த யோகமாக மாறப்போகிறது.

இது ஆசிரியர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் அங்கீகாரம் பெற்றுக் கொடுக்கப் போகிறது.

மேலும், 11 ஆம் வீட்டில் சுக்கிர பகவான் ஆட்சி பெற்று இருந்தாலும் அவர் புதனுடன் இணைந்து இருப்பதால் தேவையில்லாத நண்பர்களுடைய நட்புகள் மற்றும் தவறான வழி நடத்துதல் வர வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

2026: அக்டோபர் 31ல் குரு கேது சேர்க்கை.. பொருளாதார வளர்ச்சியை சந்திக்கும் ராசிகள் யார்?

2026: அக்டோபர் 31ல் குரு கேது சேர்க்கை.. பொருளாதார வளர்ச்சியை சந்திக்கும் ராசிகள் யார்?

எனவே மிகவும் கவனமாக இருப்பது அவசியம். மேலும், விளம்பர நிறுவனங்கள் டிஜிட்டல் ஏஜென்சிகள் மற்றும் மது கடைகள் வைத்திருப்பவர்கள் இந்த மாதம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இதற்கு பரிகாரமாக தன்வந்திரி ஹோமம் செய்வது அல்லது பள்ளி மாணவர்களுக்கு உதவுவது இது மிகச் சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும்.

மேலும், நவம்பர் 1, 26, 27 மற்றும் 28 தேதிகளில் தனுசு ராசிக்காரர்கள் கூடுதல் கவனத்தோடு இருப்பது மிகவும் சிறந்தது என்று ராம்ஜி அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதனை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US