ஜோதிடம் என்பது ஒருவகை எச்சரிக்கை.. சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அழிவு நிச்சயம்

By Sakthi Raj Oct 22, 2026 01:30 PM GMT
Report

இன்றைய காலகட்டங்களில் பலரும் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை வைத்து வருகிறார்கள். அந்த வகையில், ஜோதிடம் என்பது ஒருவகையான கணிதம். ஒருவகை எச்சரிக்கையாகவே உள்ளது. ஆனால் அதனை நாம் குருட்டுத்தனமாக நம்புகின்ற பொழுது நமக்கு அவை நன்மையை தருவதை விட மிகப் பெரிய அளவில் தீமையை தான் கொடுக்கிறது.

அப்படியாக, மகாபாரதத்தில் திருதராஷ்டிரன் ஒட்டுமொத்த குடும்பமே அழிந்து போவதற்கு காரணமாக அமைந்தது இந்த ஜோதிடம். அது மட்டும் அல்லாமல் சகுனியின் குடும்பமும் முழுமையாக அழிந்துவிட்டது. சகுனி தந்தை சுபலன். திருதராஷ்டிரனுக்கு நூறு குழந்தைகள் இருந்தது போலவே சுபலனுக்கும் 100 பிள்ளைகள் தான்.

அந்த வகையில், ஒரு சமயம் திருதராஷ்டிரனை சந்திக்க வந்த ஒரு ஜோதிடர் மகாராஜா! உங்களுடைய குடும்பத்திற்கு உங்களுடைய மனைவி குடும்பத்தால் தான் அழிவு என்று சொல்லிவிட்டார்.

ஜோதிடம் என்பது ஒருவகை எச்சரிக்கை.. சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அழிவு நிச்சயம் | Astrology Misused Can Ruin Your Life

மகாபாரதம்: சகாதேவனுக்கு ஜோதிட ஞானம் எப்படி கிடைத்தது என்று ரகசியம் தெரியுமா

மகாபாரதம்: சகாதேவனுக்கு ஜோதிட ஞானம் எப்படி கிடைத்தது என்று ரகசியம் தெரியுமா

பார்த்தான்! திருதராஷ்டிரன், பிறகு சகுனி உட்பட 100 பேரையும் சிறையில் அடைத்ததோடு மட்டுமல்லாமல் அந்த 100 பேருக்கும் சேர்ந்து ஒரே ஒரு உருண்டை தான் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று உத்தரவும் போட்டு விட்டான். சுபலனுக்கு கடும் கோபம் வந்துவிட்டது.

அவன் தன் மகன்களில் மிகவும் புத்திசாலியா இருக்க கூடிய சகுனியை அழைத்து இங்கு தரக்கூடிய ஒரு உருண்டை சாப்பாட்டை உனக்கு மட்டுமே தருகிறேன் நீ எப்படியாவது சாப்பிட்டு பிழைத்துக் கொள். நாங்கள் பட்டினியால் சாகப்போவது உறுதி. ஆனால், உன்னுடைய 99 சகோதரர்களும் இறந்தது போலவே திருதராஷ்டிரன் 100 பிள்ளைகள் சாக வேண்டும்.

அதோடு நான் இறந்ததும் என்னுடைய முதுகெலும்பை உடைத்து இரண்டு பகடைகளாக செய்து கொள். அந்தப் பகடைகளைக் கொண்டு திருதராஷ்டிரனுக்கு சாதகமாக நடந்து கொள்வது போல சூதாட்டத்தில் வெற்றி கொள். அதன் பின்பு அவனோடு குடும்பம் தானாகவே அழிய துவங்கும். தோற்றவர்கள் திருதராஷ்டிரன்குடும்பத்தை பழி வாங்கி விடுவார்கள் என்றார்.

ஜோதிடம் என்பது ஒருவகை எச்சரிக்கை.. சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அழிவு நிச்சயம் | Astrology Misused Can Ruin Your Life

12 ராசிகளுக்கும் இந்தத் தொழில் செட் ஆகவே ஆகாதாம்.. என்ன தெரியுமா?

12 ராசிகளுக்கும் இந்தத் தொழில் செட் ஆகவே ஆகாதாம்.. என்ன தெரியுமா?

சுபலன் சொன்னது போலவே சகுனியும் செய்தான். பாண்டவர்கள் வென்றனர், கௌரவர்கள் கூட்டம் அடியோடு மடிந்தது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஜோதிடம் உண்மைதான். இருந்தாலும் நாம் சொல்ல வேண்டிய விஷயத்தை மட்டும் தான் ஜாதகம் பார்க்க வருபவர்களிடம் சொல்ல வேண்டியது அவசியமாக இருக்கிறது.

எதார்த்தமாக ஒரு சில உண்மையை சொல்ல போக எடுத்துக் கொள்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை நம்மால் கணிக்க முடியாது. அது சில நேரங்களில் தவறாக கூட முடியலாம். ஆக, விதிபடியே நடக்க வேண்டும் என்றாலும் அதற்கு காரணமாக சில நேரங்களில் நாம் அமைந்துவிடாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

ஜோதிடத்தையும் தாண்டி அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தைகளுக்கு அதிக அளவில் முக்கியத்துவமும் நம்பிக்கையும் மக்கள் கொடுப்பதால் நல்ல முறையில் ஒருவரை வழிநடத்தக் கூடியதாகவும் கெடு பலன்கள் இருந்தாலும் அதை அவர்களுக்கு ஏற்றவாறு சொல்ல பழகிக் கொண்டு ஜாதகம் பார்க்கின்ற பொழுது நன்மை நடக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US