2026: சனிஜெயந்தி எப்பொழுது? அன்று தவறியும் இந்த 4 தவறுகள் செய்யாதீர்கள்

By Sakthi Raj May 12, 2026 09:10 AM GMT
Report

 ஜோதிட சாஸ்திரத்தை ஒவ்வொரு ஆண்டும் வைகாசி அமாவாசை தினத்தன்று சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது, இந்த தினத்தில்தான் சூரிய பகவானின் மகனாக சனிபகவான் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. சனி ஜெயந்தி மே 16 சனிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் சனி பகவானை வழிபாடு செய்து அவருக்கு எண்ணெய் அர்ப்பணித்து மற்றும் தானம் செய்து வழிபாடு செய்தால் வாழ்க்கையில் முழு பலன் பெறலாம். அப்படியாக, மறந்தும் சனி ஜெயந்தி அன்று சில குறிப்பிட்ட தவறுகள் செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.

2026: சனிஜெயந்தி எப்பொழுது? அன்று தவறியும் இந்த 4 தவறுகள் செய்யாதீர்கள் | 2026 Sani Jeyanti Date And Worship Details

1. சனி பகவான் எளிமையை விரும்புபவர, நல்ல செயல்களை பாராட்டுபவர். ஆக சனிபகவானுக்கு ஏழைகளை துன்புறுத்துவதும் பெரியவர்களை அவமதிப்பதும் தொழிலாளிகளுக்கு சரியான ஊதியம் கொடுக்காமல் இருப்பது போன்ற செயல்களை அவர் விரும்ப மாட்டார்.

ஆக, சனி பகவானுக்கு நாம் எண்ணெய் ஏற்றி விளக்கு ஏற்றுவதை கடந்து நம் செயல்களை நல்ல முறையில் மாற்றிக் கொண்டாலே அவருடைய தாக்கம் குறையும்.

2. முடிந்தவரை சனி ஜெயந்தி அன்று அசைவம் மற்றும் மது உட்கொள்வதை தவிர்த்து விட வேண்டும். சனி ஜெயந்தி அன்றாவது சாத்வீகமான உணவுகளை எடுத்துக் கொண்டு நம்முடைய வழிபாடு மேற்கொள்வது அவசியமாக இருக்கிறது.

2026: சனிஜெயந்தி எப்பொழுது? அன்று தவறியும் இந்த 4 தவறுகள் செய்யாதீர்கள் | 2026 Sani Jeyanti Date And Worship Details

காமாட்சியம்மன் கோயிலுக்கு போறீங்களா? அப்போ இந்த 5 நபரை தரிசிக்க தவறாதீர்கள்

காமாட்சியம்மன் கோயிலுக்கு போறீங்களா? அப்போ இந்த 5 நபரை தரிசிக்க தவறாதீர்கள்

3. சனி ஜெயந்தி என்று அரசமரம் மற்றும் வன்னி மரத்தை சுற்றி வழிபாடு செய்வது நல்ல பலன்கள் தரும். ஆனால், ஒரு பொழுதும் இந்த இரண்டு மரங்களையும் வெட்டுவது அவமதிப்பது கூடாது. இது நமக்கு மிகப்பெரிய சனி தோஷத்தை கொடுத்து விடும்.

4. சனி பகவானுடைய முழு ஆசியை பெற்று நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் பொய் பேசுவதை தவிர்த்து விடுங்கள். எந்த காலகட்டத்திலும் உண்மையை பேசி நீங்கள் வாழும் பொழுது உங்களின் நேர்மையான பண்புக்கு கட்டாயம் சனி பகவானின் அருள் கிடைக்கும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US