2026: சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு தான் ஜாக்பாட்.. உங்கள் ராசி உள்ளதா?

By Sakthi Raj Mar 06, 2026 08:26 AM GMT
Report

  வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சி மார்ச் 6ஆம் தேதி காலை 8. 24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசிகளில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறினார். இந்த மாற்றம் கட்டாயமாக தனிநபர் வாழ்க்கையில் தொடங்கி உலக அளவிலான மிகப்பெரிய தாக்கத்தை கொண்டு செய்யும்.

அந்த வகையில் சனி பெயர்ச்சியானது ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் மாற்றத்தை கொடுக்கப் போகிறது. அதாவது மீன ராசிக்கு ஜென்ம சனியும், கும்பராசிக்கு ஏழரை சனியின் கடைசி கட்டமும், மேஷ ராசிக்கு ஏழரை சனி தொடக்கமும், சிம்ம ராசிக்கு அஷ்டம சனியும் தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும், கன்னி ராசிக்கு கண்டக சனியும் நடைபெற உள்ளது.

இதனால் சில ராசிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு சனி பகவான் மிகப்பெரிய நன்மையை செய்ய காத்திருக்கிறார். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026: சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு தான் ஜாக்பாட்.. உங்கள் ராசி உள்ளதா? | 2026 Sani Peyarchi Brings Luck To 4 Zodiac

2026-ல் தொடங்கிய சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாற்றில் இன்று என்ன நடந்தது?

2026-ல் தொடங்கிய சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாற்றில் இன்று என்ன நடந்தது?

 

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி காலகட்டமானது இவர்களுக்கு பொருளாதாரம் முன்னேற்றம் கொடுக்க போகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நண்பர்களின் முழு ஆதரவையும் இந்த காலகட்டத்தில் பெறுவீர்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்கு இந்த காலகட்டமானது இவர்களுக்கு நட்புகள் இடையே ஏற்பட்ட மன வருத்தங்கள் விலகும். வழக்கு விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி வெற்றி உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் உங்களுக்கான மரியாதையும் சமுதாயத்தில் உங்களுக்கான செல்வாக்கும் உயரும்.

கடகம்:

கடக ராசிக்கு நீண்ட நாள் முயற்சிகள் கைகூடிவரும். கடன் பிரச்சனைகள் இருந்து முற்றிலுமாக விடுதலை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடிவரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் விலகும். வெளியூர் பயணம் லாபமாக அமையும்.

துலாம்:

துலாம் ராசிக்கு இந்த காலகட்டம் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்கிறீர்கள். எதிர்பாராத பெருமைகளும், வேலையில் உங்களுக்கான அங்கீகாரமும் கிடைக்கும்.     

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US