2026: இழந்ததை மீட்க போகும் விருச்சிக ராசியினர்.. ஜூலையில் கட்டாயம் இது நடக்குமாம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் மிகவும் சிறப்பான மாதமாக இருக்கப் போகிறது. அதாவது இவர்களுக்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் பகவான் இருப்பதால் இல்லற வாழ்க்கையில் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் காதலும் உண்டாகும்.
மேலும், எட்டாமிடத்தில் புதன் பகவான் ஆட்சி பெற்று அமர்வதால் உயர்ந்த செல்வம் புகழ் ஆகியவற்றை மீட்டெடுப்பீர்கள். அடமானம் வைத்த நகை கைகளுக்கு திரும்பும். ஜூலை 17ஆம் தேதி வரை ஒன்பதாம் இடத்தில் சூரிய பகவான் இருப்பதால் தொழில் ரீதியாக சிறு சிறு மன கசப்புகள் அல்லது தாமதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். நான்காம் இடத்தில் ராகு பகவான் இருப்பதால் குடும்ப உறவுகள் இடையே கவனமாக இருப்பது அவசியமாகும்.
தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். ஐ டி துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் பயணங்கள் அமைய வாய்ப்பு உள்ளது.
இந்த காலகட்டங்களில் உங்களுக்கு பாதகாதிபதி சந்திரன் விலகி மனத்தெளிவை கொடுக்கும். சதுர்த்தி திதி அன்று விநாயக பெருமானை வழிபாடு செய்வதும் சந்திர தோஷத்தை போக்கும். குருபகவான் ஒன்பதாம் இடத்தில் அமர்வதால் வியாழக்கிழமை குரு பகவான் வழிபாடு செய்வது தடைபட்ட காரியங்கள் மீண்டும் பிரச்சனை இல்லாமல் துவங்குவதற்கான வழி வகுக்கும்.
மேலும், விருச்சிக ராசியினரை பொறுத்தவரை இவர்கள் இந்த ஜூலை மாதம் 13 மற்றும் 14 தேதிகளில் இவர்கள் மிகுந்த கவனத்தோடு இருப்பது அவசியமாகும். மேலும், விருச்சிக ராசிகளுக்கு ஜூலை மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |