2026: ஜூன் பிரதோஷத்தை மட்டும் தவற விடாதீர்கள்.. பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமாம்

By Sakthi Raj Jun 23, 2026 08:44 AM GMT
Report

 ஒவ்வொரு மாதமும் பல்வேறு விசேஷ தினங்கள் வருகிறது என்றாலும் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விசேஷ தினமும் சில முக்கியத்துவங்களை பெறுகிறது. அதை நாம் தவறவிடாமல் விரதம் இருந்து வழிபாடு செய்தால் மிகப்பெரிய நற்பலன்களை பரிக்கல் பெறலாம்.

அப்படியாக ஜூன் 27 அன்று வரும் சக்தி வாய்ந்த வாய்ந்த பிரதோஷ தினத்தை நாம் தவறவிட்டால் 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நாம் காத்திருக்க வேண்டுமாம். அதை பற்றி பார்ப்போம். சிவபெருமான் வழிபாடுகளில் பிரதோஷ தின வழிபாடு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் பிரதோஷ தினம் வருகிறது என்றாலும் சனி மற்றும் திங்கட்கிழமை வரக்கூடிய பிரதோஷம் கூடுதல் சிறப்பையும் பெறுகிறது. அதிலும் குறிப்பாக சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ளும் பொழுது ஒரு ஆண்டு முழுவதும் பிரதோஷ விரதம் இருந்து வழிபாடு பெற்ற பலனை பெறலாம்.

2026: ஜூன் பிரதோஷத்தை மட்டும் தவற விடாதீர்கள்.. பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமாம் | Never Miss June 27 Powerful Sani Pradosham Worship

2026: ஜூலை முதல் மாளவ்ய யோகத்தால் பணமழையில் நனையப் போகும் 3 ராசிகள் யார் ?

2026: ஜூலை முதல் மாளவ்ய யோகத்தால் பணமழையில் நனையப் போகும் 3 ராசிகள் யார் ?

அந்த வகையில், அற்புதமான சனி பிரதோஷம் இந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி அன்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் இரண்டு முறை வருகிறது என்றாலும் எதற்காக நாம் இந்த மாதம் பிரதோஷ தவறவிட்டால் அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்று குழப்பம் இருக்கும்.

அதாவது, சனி பிரதோஷம் எல்லா மாதங்களில் வருவதில்லை. 2026 ஆம் ஆண்டு இரண்டு முறை மட்டுமே சனி பிரதோஷம் வருகிறது. அதில் ஏற்கனவே ஒரு சனி பிரதோஷம் ஜனவரி மாதத்தில் நிறைவடைந்து விட்டது. மற்றொரு சனி பிரதோஷம் வருகின்ற ஜூன் 27ஆம் தேதி என்று வருகிறது.

அதற்குப் பிறகு 2026 ஆம் ஆண்டு சனி பிரதோஷம் இல்லை. அடுத்த சனி பிரதோஷத்திற்கு நாம் 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை காத்திருக்க வேண்டும்.  

சனிப்பிரதோஷ மகிமை :

பிரதோஷ வழிபாடுகளில் சனி பிரதோஷம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. சனி பிரதோஷம் அன்று அன்று சிவபெருமானையும் சனீஸ்வரனையும் வழிபாடு செய்தால் ஏழரை சனி, ஜென்ம சனி போன்ற கர்ம வினைகள் யாவும் விலகும்.

சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோஷத்தை நாம் வழிபாடு செய்யும் பொழுது 120 ஆண்டு பிரதோஷ வழிபாடு செய்த பலனை நாம் பெறலாம் என்பது ஆன்மீக நம்பிக்கை. இந்த நாளில் சிவபெருமானையும் சனீஸ்வரரை வழிபாடு செய்யும் பொழுது பாவங்கள் கர்ம வினைகள் யாவும் நீங்கும்.

2026: ஜூன் பிரதோஷத்தை மட்டும் தவற விடாதீர்கள்.. பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமாம் | Never Miss June 27 Powerful Sani Pradosham Worship

2026 ஜூலை: துலாம் ராசியினர் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?

2026 ஜூலை: துலாம் ராசியினர் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?

சனீஸ்வரர் சிவபெருமானின் தீவிர பக்தர் என்பதால் அன்றைய தினம் சிவபெருமானை வேண்டும் பொழுது நம்முடைய முன் ஜென்ம கர்ம வினைகளில் இருந்து இப்பிறவியில் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் வரை விலகும் என்பது நம்பிக்கை.

சனி பிரதோஷம் அன்று சிவபெருமானையும் சனி பகவானையும் வழிபாடு செய்து இந்த நாளில் கருப்பு எள் மற்றும் கடுகு எண்ணெய் ஆகியவற்றை தானமாக வழங்குவது மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.

அதேபோல் சனி பகவானுக்கு தொடர்புடைய இரும்பு பொருட்கள், கருப்பு உளுந்து உணவு தானம் செய்வதாலும் சிறந்த பலன் பெறலாம். அதேபோல், சிவபெருமானுக்கு வில்வம் மற்றும் செம்பருத்தி பூ கொண்டு அர்ச்சனை செய்யும் பொழுது சிறப்பான பலன்களை பெற முடியும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US