2026: செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி.. தொட்டதெல்லாம் வெற்றி பெறும் ராசிகள் யார்?

By Sakthi Raj Sep 02, 2026 11:53 AM GMT
Report

 ஜோதிட ரீதியாக செவ்வாய் பகவான் தான் ஒருவருக்கு தைரியம், வீரியம் மற்றும் மன வலிமையை கொடுக்கக்கூடியவர். மேலும், இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை அவருடைய இடத்தை மாற்றுகிறார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல கூடிய செவ்வாய் பகவான் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார்.

அந்த வகையில் செப்டம்பர் இரண்டாம் தேதி செவ்வாய் பகவான் தன்னுடைய நட்சத்திரத்தை மாற்றுகிறார். செவ்வாய் குருவின் நட்சத்திரத்திற்குள் செல்வதால் அதனுடைய தாக்கம் எல்லா ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இந்த செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் தொட்டதெல்லாம் வெற்றி அடையக்கூடிய ராசிகள் யார் என்று பார்ப்போம்.

2026: செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி.. தொட்டதெல்லாம் வெற்றி பெறும் ராசிகள் யார்? | 2026 Sept 2 Sevvai Peyarchi Astrology Prediction

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 8 ஜோதிட குறிப்புகள்..

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 8 ஜோதிட குறிப்புகள்..

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய அளவில் நன்மையை பெற்றுக் கொடுக்கப் போகிறது. வழக்கு சார்ந்த விஷயங்களில் திடீர் திருப்பங்கள் அமையும். குடும்பங்களில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கடன் வாங்கியவர்களுக்கு கடன் அடைக்க கூடிய வாய்ப்புகள் உருவாகும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் தொழில் ரீதியாக மிகப்பெரிய வேலை வாய்ப்புகள் தேடி வர போகிறது. அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் இவர்கள் நல்ல பலன்களை பெற போகிறார்கள். ஒருவருக்கு அரசு பதவிகள், அரசு மரியாதை இந்த காலகட்டங்களில் தேடி வரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன கவலைகள் விலகும்.

நீங்கள் துலாம் ராசியா? உங்களுக்கு காதல் திருமணம் கைக்கொடுக்குமா?

நீங்கள் துலாம் ராசியா? உங்களுக்கு காதல் திருமணம் கைக்கொடுக்குமா?

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாகக் கூடிய காலமாக அமையப் போகிறது. உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US