2026: புதன் பெயர்ச்சி: செப்டம்பர் மாதம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறதாம்
ஜோதிடத்தில் புதன் பகவான் தான் ஒருவருடைய அறிவு, ஞானம், கணக்கு, தொழில் ஆகியவற்றுக்கு காரணியாக இருக்கிறார். அந்த வகையில், தற்போது கன்னி ராசியில் இருக்கக்கூடிய புதன் பகவான் செப்டம்பர் 26 ஆம் தேதி காலை 9:29 மணி அளவில் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். துலாம் ராசி சுக்கிர பகவான் ஆளக்கூடிய ராசி.
ஆதலால் இந்த பெயர்ச்சி ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் பணம் தொழில் மற்றும் உறவுகள் இடையே ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்படுத்தப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

மிதுனம்:
இந்த காலகட்டம் மிதுன ராசிக்கு வியாபார ரீதியாக இருந்து வந்து மன கசப்புகள் விலகும். தொழில் விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதற்குரிய பணமும் நினைத்த இடத்தில் உங்களுக்கு உதவு வந்து சேரும். வேலையில் உங்களுக்கான அங்கீகாரமும் உங்களுடைய திறமைகளை பாராட்டக்கூடிய சூழ்நிலையும் உருவாகும்.
கன்னி:
இந்த காலகட்டங்களில் உங்களுடைய பிள்ளைகளின் வளர்ச்சி உங்களுக்கு மன மகிழ்ச்சியை கொடுக்கும். அத்தை வழி உறவுகளால் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். புதிய வியாபாரம் தொடங்குவதற்கான யோசனைகள் கைக்கூடி வரும். உயர்கல்விக்கான வாய்ப்புகளில் இருந்து வந்த தடைகள் யாவும் விலகும்.
துலாம்:
புதிய கல்வி அல்லது புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் உண்டாகும். தொழில் ரீதியாக பின்னடைவு சந்தித்திருப்பவர்கள் அதனை சரி செய்வதற்கான வழியை புரிந்து கொள்வீர்கள். சொத்து வழக்குகளில் இருந்து வந்த பிரச்சனைகள் யாவும் விலகும். பெண் பிள்ளைகளால் இருந்து வந்து மனக்கசப்புகள் நீங்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |