2026: புதாதித்ய ராஜயோகம்.. மே மாதம் முதல் திடீர் திருப்பங்களை சந்திக்க போகும் ராசிகள்

By Sakthi Raj Apr 25, 2026 10:23 AM GMT
Report

  ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட சில நேரங்களில் அவர்களுடைய இடத்தை மாற்றுகிறார்கள். அந்த வகையில் இந்த மாற்றமானது 12 ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படியாக, சூரிய பகவானும் புதன் பகவானும் ஒரே நேரத்தில் பெயர்ச்சி அடைகிறார்கள்.

இது புதாதித்ய ராஜ யோகத்தை உருவாக்குகிறது. ஏப்ரல் 30ஆம் தேதி இந்த ராஜயோகம் உருவாகிறது. இதனால் குறிப்பிட்ட சில ராசியினர் மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்ட வாய்ப்பையும் திடீர் திருப்பங்களையும் மாற்றங்களையும் வாழ்க்கையில் சந்திக்கப் போகிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

2026: புதாதித்ய ராஜயோகம்.. மே மாதம் முதல் திடீர் திருப்பங்களை சந்திக்க போகும் ராசிகள் | 2026 Sun Mercury Conjuction Astrology Prediction

வாஸ்து: இரவு நேரத்தில் ஒருபொழுதும் இந்த 4 பொருட்களை திறந்து வைக்காதீர்கள்.

வாஸ்து: இரவு நேரத்தில் ஒருபொழுதும் இந்த 4 பொருட்களை திறந்து வைக்காதீர்கள்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு புதாதித்ய ராஜயோகமானது இவர்களுக்கு திடீர் மாற்றத்தை கொடுக்கப்போகிறது. உங்களுடைய பேச்சுக்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். கம்பீரமாகவும் தைரியமாகவும் சமுதாயத்தில் நீங்கள் வலம் வரப்போகிறீர்கள். ஐ. டி துறையில் வேலை செய்பவர்களுக்கு அற்புதமான காலகட்டம். பணவரவுகள் இரட்டிப்பாக கூடிய அமைப்பு பெறுவீர்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதாதித்ய ராஜயோகமானது இவர்களுக்கு பொருளாதாரத்தில் சந்தித்த சிக்கல்களில் இருந்து விடுதலை கொடுக்கப்போகிறது. வெளிநாடு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். திருமண வரன் பார்ப்பவர்களுக்கு நினைத்த வரம் கிடைக்கும்.

2026: கடகம் மற்றும் சிம்ம ராசிக்கு மே மாதம் எப்படி இருக்க போகிறது? முழு பலன் இதோ

2026: கடகம் மற்றும் சிம்ம ராசிக்கு மே மாதம் எப்படி இருக்க போகிறது? முழு பலன் இதோ

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு புதாதித்ய ராஜயோகமானது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை தேடி கொடுக்கப் போகிறது. போட்டி தேர்வுகளுக்கு தயாராக கூடிய மாணவர்களுக்கு அற்புதமான காலகட்டம். மாணவர்களின் திறமையும் ஞாபகசக்தியும் மேம்படும். படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டுவீர்கள். கடந்து சில மாதங்களாக சந்தித்து வந்த மன அழுத்தங்களிலிருந்து விடுபட்டு முன்னேற்றம் கிடைக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US