கோவிலில் தவறியும் இந்த இடங்களில் விழுந்து வணங்க கூடாதாம்.. ஏன் தெரியுமா?
நம்முடைய மனம் துன்பப்படும் பொழுது எதைப் பற்றியும் யோசிக்காமல் ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்தால் கஷ்டம் எல்லாம் லேசாக மாறிவிடும். இது தான் ஆலயத்தின் மகிமை. அப்படியாக, கோவிலுக்கு சென்று நாம் வழிபாடு செய்யும்பொழுது கொடிமரம் முன்பாக விழுந்து வணங்குவோம்.
ஆனால், பலரும் சில சாஸ்திர விதிமுறைகள் தெரியாமல் கோவிலில் பல்வேறு இடங்களில் வழிபாட்டின் பொழுது விழுந்து வணங்கக் கூடியதை பார்க்கின்றோம். அப்படியாக கோவில்களில் எந்த இடங்களில் விழுந்து வணங்கலாம்? வணங்க கூடாது என்பதை பற்றியும் பார்ப்போம்.
கோவில் வழிபாட்டின் பொழுது கட்டாயமாக கொடிமரம் முன்பாக நாம் விழுந்து வணங்க வேண்டும். அப்பொழுது தான் நம்முடைய பிரார்த்தனை முழுமை அடையும். ஆனால், அதுவே கோவில்களில் சில இடங்களில் நாம் விழுந்து வணங்குவதால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறாமல் கூட போகக்கூடிம் என்று சொல்லப்படுகிறது.

காரணம் கோவில்கள் ஆகம சாஸ்திர விதிகளின்படி கட்டப்பட்டவை ஆகும். அதனால் கோவில் என்பது வெறும் கட்டிட அமைப்பு மட்டும் அல்லாமல் வாஸ்து சாஸ்திர விதிகளின்படி இறைவனின் திருமேனியின் வடிவமாக கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, கோவிலின் கருவறை என்பது இறைவனுடைய தலையாக கருதப்படுகிறது, அதேபோல் அர்த்த மண்டபம் இறைவனுடைய உடல் பகுதியாகும்.
மேலும், கோவில் கருவறையில் அதீத சக்தி கொண்ட வேத மந்திரங்கள் உச்சரிக்கப்பட்ட தகடுகளும், கற்கள் எந்திரங்கள் போன்றவை பதிக்கப்பட்டு இருக்கும். இவற்றிலிருந்து வெளிவரக்கூடிய அதிர்வலைகள் மனித உடலாலும் மனித மூளையாலும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
அதனால்தான் கருவறைக்கு எதிராக விழுந்து வணங்கக் கூடாது என்று சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த மந்திர சக்தியின் அதிர்வுகள் மனிதர்களின் மூலைகளையும் நரம்புகளையும் பாதிக்கக்கூடும். ஆதலால் இந்த விஷயங்கள் தெரியாமல் யாரேனும் கோவில் மூலஸ்தானத்திற்கு முன்பு விழுந்து வணங்கும் பொழுது அவர்களை அங்கு இருப்பவர்கள் தடுக்கிறார்கள். இதை போல் தான் கருவறைக்கு அடுத்து இறைவனின் மார்பு பகுதியாக கருதப்படும் அர்தமண்டபதில் விழுந்து வணங்குவது இறைவனை அவமதிப்பதாக கருதப்படுகிறது.

ஆதலால் அந்த இடங்களிலும் நாம் விழுந்து வணங்குவதை தவிர்க்க வேண்டும். ஆக, கோவில் வழிபாடுகளில் இறைவனின் திருவடிகளாக கருதப்படும் கொடி மரத்திற்கு முன்பாக விழுந்து வணங்குவது தான் சரியான சாஸ்திர அமைப்பாகும்.
மூலஸ்தானத்திற்கு சென்று இறைவனை வழிபாடு செய்து வணங்கிய பிறகு கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து கொடி மரத்துக்கு முன்பாக அமர்ந்து நம்முடைய வேண்டுதல்களை சொல்ல வேண்டும். பிறகு கொடி மரத்திற்கு முன்பு விழுந்து வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வேண்டுதல் மற்றும் வழிபாடு நிறைவேறுகிறது.
இந்த கொடி மரத்திற்கு முன்பாக விழுந்து வணங்கும் பொழுது ஆண்களாக இருந்தால் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும், பெண்களாக இருந்தால் பஞ்சாங்க நமஸ்காரம் செய்து வணங்க வேண்டும்.
ஆக, நமக்கு சாஸ்திர விதிகளும் ஆகம விதிகளும் பல இடங்களில் தெரியாமல் இருப்பதால் சில தவறுகளை செய்து விடுகிறோம். ஆக, அதை நாம் திருத்திக் கொண்டு இறைவழிபாடு செய்யும் பொழுது நம்முடைய வழிபாடு முழுமை அடைகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |