2026: ஐப்பசி மாத சூரியன் சனி ஷடாஷ்டக யோகம்- எந்த ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கிறது
நவகிரகங்களில் தலைவராக இருக்கக்கூடிய சூரியன் மற்றும் கர்ம பலன்களை வழங்கக்கூடிய சனியும் சடாஷ்டக நிலையில் இணையுள்ளதால் "ஷ்டாஷ்டக யோகம்"ஒரு சில ராசிகளுக்கு வாழ்க்கையில் தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது.
அந்த வகையில், அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை நடக்கக்கூடிய ஐப்பசி மாத காலங்களில் இந்த மாற்றம் மிகப்பெரிய அளவில் அற்புதங்களை பெறக்கூடியதாக இருக்கிறது. இதனால் எந்த ராசிகள் மிகப்பெரிய அளவில் நற்பலன்களை அடையப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு வியக்கத்தக்க லாபத்தை கொடுக்க போகிறது.
வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வேலைகளில் இருக்கக்கூடியவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நீங்கள் இழந்த பணத்தை மீண்டும் பெறக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியில் இருக்கக்கூடியவர்களுக்கு இந்த காலகட்டம் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்க போகிறது. தொழில் தொடர்பாக எடுக்கக்கூடிய முயற்சிகள் கைகூடிவரும்.
வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கடின உழைப்பிற்கான வருமானமும் அதற்கான அங்கீகாரத்தையும் பெறுவீர்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றமானது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கங்களை கொண்டு வந்து சேர்க்கப்போகிறது.
பொருளாதார நிலை உயர்வு, எதிர்பாராத பெரிய நீதி ஆதாயம் கிடைப்பதோடு உங்களுக்கு கௌரவமும் புகழும் இந்த கால கட்டங்களில் அதிகரிக்க போகிறது. காதல் வாழ்க்கை இனிமையாக அமையும். வேலை ரீதியாக சிக்கல் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |