2026 ரிஷப ராசிக்கு அக்டோபர் மாதம் காத்திருக்கும் அந்த நற்செய்தி என்ன?
ஜோதிட ரீதியாக ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டுஅக்டோபர் மாதம் எப்படி இருக்க போகிறது? என்று பார்ப்போம்.
இவர்களுக்கு இந்த மாதம் சூரியன் மற்றும் சுக்கிர பகவானுடைய நீசபங்க ராஜயோகத்தால் இவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
விரும்பிய நிறுவனங்களில் இவர்கள் வேலை பார்க்கக்கூடிய யோகம் உருவாகும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் தேவை இல்லாத ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம்.
பங்கு சந்தையில் அதிக முதலீடு அல்லது தேவையில்லாத முதலீடுகளை தவிர்ப்பது அவசியம். வாழ்க்கை துணையுடன் இருந்து வந்த கசப்புகள் விலகி ஒரு நல்ல சுமூகமான நிலை பிறக்கும். இவர்கள் அக்டோபர் மாதத்தில் 16, 17, 18 இந்த தேதிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அமைதியை கடைப்பிடிப்பது அவசியம். மேலும், அக்டோபர் 20ஆம் தேதி அன்று குரு அதிசாரம் மற்றும் விஜயதசமி ஆகியவை புதிய கலைகள் அல்லது ஆன்மீக விஷயங்களை கற்பதற்கு ஒரு சிறந்த நாளாகவே அமைகிறது.
இவர்கள் அக்டோபர் 25ஆம் தேதி நடக்கக்கூடிய அன்னாபிஷேகம் சிறப்பு வழிபாடு செய்வது பலன்களை பெற்றுக் கொடுக்கும். மேலும், இவர்களுக்கு அக்டோபர் மாதம் என்னென்ன விசேஷங்கள் காத்திருக்கிறது என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.