2026: ஆடி பெருக்கு எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
ஆடிப்பெருக்கு அன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே, ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மட்டும் உகந்த மாதம் என்பதாக இருக்கிறது.
இந்த மாதத்தில் பருவகால மாற்றங்கள் மற்றும் சூரிய பகவானுடைய கதிர்வீச்சு காரணமாக உடல் ஆரோக்கியத்தில் சில மாற்றம் உண்டாகும். எனவே பெரிய சுப நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் முன்னெச்சரிக்கையாக சொல்லி இருக்கிறார்கள்.
மேலும், ஆடி பௌர்ணமி என்பது கல்வி மற்றும் ஞானத்திற்கு அதிபதியான ஹயக்ரீவரின் பிறந்த நாளாகவும் சங்கரன்கோவிலில் அம்பாள் சிவனை நோக்கி தபசு செய்த நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் ஞாபகம் மறதி விலகி அறிவு வளர வழிபாடு செய்வது மிக சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும்.
ஆடி பதினெட்டாம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழாவாகும். குறிப்பாக ஆறு மற்றும் நீர் நிலைகளை வணங்கி விவசாய மற்றும் வாழ்வாதாரம் செழிப்பாக வளர பிரார்த்தனை செய்யக்கூடிய நாளாக அமைகிறது.
இந்த நாளில் சுமங்கலி பெண்கள் தங்களுடைய மாங்கல்யத்தில் மஞ்சள் சரடு கோர்த்து வழிபாடு செய்வது மிகச் சிறந்த பலன்களை கொடுக்கும். ஆடி மாதத்தில் கோவில்களில் மாவிளக்கு ஏற்றுவதும் கூழ் ஊற்றுவதும் குலதெய்வ வழிபாடு செய்வதும் நாம் நினைத்த வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றி கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
மேலும், ஆடி மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |