பலவீனமான ராசிக்கு செல்லும் சுக்கிரன்.. எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய ராசிகள் யார்?

By Sakthi Raj Aug 03, 2026 08:30 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் கன்னி ராசியில் சுக்கிர பகவான் பலவீனமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அன்று கன்னி ராசியில் சுக்கிரன் செல்கிறார். இவர் அங்கு செப்டம்பர் இரண்டாம் தேதி வரை உள்ள இருக்கிறார்.

ஒரு சில ராசிகளுக்கு எதிர்மறை தாக்கங்களை கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அவை எந்த ராசிகள் என்று பார்க்கலாம்.

பலவீனமான ராசிக்கு செல்லும் சுக்கிரன்.. எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய ராசிகள் யார்? | 2026 Till Sep 2 Venus Transit Bring Difficult Time

திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா? இந்த பதிவு உங்களுக்கு தான்

திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா? இந்த பதிவு உங்களுக்கு தான்

மேஷம்:

மேஷ ராசியினருக்கு சுக்கிர பகவானுடைய இந்த பெயர்ச்சி ஆறாம் வீட்டில் நடக்கப் போகிறது. இந்த காலகட்டங்களில் இவர்கள் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளை சந்திக்கலாம்.

எதிரிகள் தொல்லை மீண்டும் வரலாம். இந்த காலகட்டங்களில் கடன் கொடுப்பதையும் கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். எதிர்பாராத பொருளாதார சிக்கலை மாட்டிக் கொள்ளலாம்.

மிதுனம்:

இவர்களுக்கு சுக்கிரனுடைய இந்த பலவீனமான பெயர்ச்சியானது நான்காம் வீட்டில் நடக்கிறது. அதனால், குடும்ப வாழ்க்கையில் இது மிகப்பெரிய அளவில் பாதிக்கலாம்.

வீட்டில் மன அழுத்தமான சூழ்நிலை காணப்படும். உடல் நலம் குறித்தும் சில கவலைகள் வரலாம். சொத்து பிரச்சினைகள் மீண்டும் வரும்.

2026: இன்று ஆடிப்பெருக்கு.. கட்டாயமாக செய்ய வேண்டிய விஷயங்கள்

2026: இன்று ஆடிப்பெருக்கு.. கட்டாயமாக செய்ய வேண்டிய விஷயங்கள்

துலாம்:

துலாம் ராசி அதிபதி சுக்கிர பகவான். கன்னி ராசியில் பலவீனமான சுக்கிரன் இடமாற்றமானது இவர்களுக்கு பன்னிரண்டாம் வீட்டில் இருப்பது செலவுகளை அதிகரிக்கப் போகிறது.

இந்த மாதத்தில் திட்டமிடாத பயணங்கள் மேற்கொள்வது கூடுதலான செலவை கொடுக்கும். எதிர்பாராத பொருளாதார இழப்பு வரலாம். உறவுகளில் தவறான புரிதல் உண்டாகலாம். கவனமாக இருக்க வேண்டும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US