2026 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் கிரிவலம் போறிங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க
நினைத்தாலே முக்தி தரக்கூடிய ஆலயம் என்றால் அது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம் தான். திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டும் அல்லது திருவண்ணாமலையில் நினைத்து உருக வேண்டும் என்றாலே ஈசன் அருள் இருந்தால் மட்டுமே முடியும்.
அப்படியாக திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய முக்கிய விசேஷம் என்றால் அங்கு பௌர்ணமி தினங்களில் நடக்கக்கூடிய கிரிவலம் தான். மேலும், இங்கு கிரிவலம் செல்வதற்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் மாநிலங்களிலிருந்தும் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வழிபாடு செய்ய வருகை தருகிறார்கள்.
காரணம் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று ஒருவர் வழிபாடு செய்யும் பொழுது அவர்களுடைய கர்ம வினைகள் மற்றும் அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி ஒரு புதிய மனிதராக அவர்கள் உருவெடுப்பார்கள் என்ற ஒரு நம்பிக்கை உண்டு.
மேலும் பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்லும் பொழுது நாம் தேவர்களும் ரிஷிகளும், சித்த புருஷர்களும் நமக்கு ஆசிர்வதிப்பதாக சொல்கிறார்கள். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு நீங்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல வேண்டும் என்று நினைத்தால் எந்த தினங்களில் கிரிவலம் செல்லலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
இந்த நாட்களில் நீங்கள் கிரிவலம் சென்று வழிபாடு செய்யும் போது நிச்சயம் ஈசனின் அருளால் உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமையும்.
2026ல் கிரிவலம் செல்ல உகந்த நேரம்:
| பெளர்ணமி நாட்கள் | கிரிவலம் துவங்கும் நாள், நேரம் | கிரிவலம் நிறைவு செய்யும் நாள், நேரம் |
| ஜனவரி 03 | ஜனவரி 02 மாலை 06.11 மணி | ஜனவரி 03 மாலை 04.07 மணி |
| பிப்ரவரி 01 | பிப்ரவரி 01 காலை 05.34 மணி | பிப்ரவரி 02 காலை 04.05 மணி |
| மார்ச் 03 | மார்ச் 02 மாலை 05.59 மணி | மார்ச் 03 மாலை 05.21 மணி |
| ஏப்ரல் 01 | ஏப்ரல் 01 காலை 07.23 மணி | ஏப்ரல் 02 காலை 07.44 மணி |
| மே 01 | ஏப்ரல் 30 இரவு 09.50 மணி | மே 01 இரவு 11.07 மணி |
| மே 31 | மே 30 பகல் 12.58 மணி | மே 31 பகல் 02.50 மணி |
| ஜூன் 29 | ஜூன் 29 காலை 04.23 மணி | ஜூன் 30 காலை 6 மணி |
| ஜூலை 29 | ஜூலை 28 காலை 07.27 மணி | ஜூலை 29 காலை 08.54 மணி |
| ஆகஸ்ட் 27 | ஆகஸ்ட் 27 காலை 09.46 மணி | ஆகஸ்ட் 28 காலை 10.22 மணி |
| செப்டம்பர் 26 | செப்டம்பர் 25 காலை 11.06 மணி | ஆகஸ்ட் 28 காலை 10.22 மணி |
| அக்டோபர் 25 | அக்டோபர் 25 காலை 11.25 மணி | அக்டோபர் 26 காலை 10.09 மணி |
| நவம்பர் 24 | நவம்பர் 23 காலை 11 மணி | நவம்பர் 24 காலை 9 மணி |
| டிசம்பர் 23 | டிசம்பர் 23 காலை 09.57 மணி | டிசம்பர் 24 காலை 07.40 மணி |
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |