2025 மார்கழி அமாவாசை: இந்த 5 விஷயங்கள் செய்ய கட்டாயம் மறக்காதீங்க
ஒவ்வொரு மாதங்களில் வரக்கூடிய அமாவாசை தினமும் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அந்த வகையில் மார்கழி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை என்பது பித்ரு பட்சத்திற்கு இணையான அமாவாசையாக சாஸ்திரங்களில் சொல்லப்படுகிறது. அப்படியாக இந்த 2025 ஆம் ஆண்டு மார்கழி அமாவாசையானது டிசம்பர் 19ஆம் தேதி அன்று வருகிறது.
இந்த நாளில் நம்முடைய வீடுகளில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் பிண்ட தானம் செய்வது அவர்களுடைய ஆன்மா சாந்தி அடைய உதவுவதோடு நமக்கும் அவர்களுடைய முழு ஆசிர்வாதம் கிடைக்கும்.
அப்படியாக இந்த மார்கழி அமாவாசை தினத்தை நாம் தவறவிடாமல் நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக சில முக்கியமான விஷயங்களை செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

மார்கழி அமாவாசையில் செய்ய வேண்டியவை:
1. மார்கழி மாதம் என்றாலே குளிர் நிறைந்த மாதமாகும். அந்த குளிரில் இருந்து நம்மை பாதுக்காக்கும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு கம்பளி போன்றவற்றை தானமாக வழங்கலாம். அதிலும் குறிப்பாக சாலையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு இந்த உதவியை நாம் செய்யும் பொழுது நிச்சயம் நம் வாழ்க்கையில் ஒரு நல்ல ஆசிர்வாதம் கிடைக்கும்.
2.மார்கழி அமாவாசை என்பது முன்னோர்கள் முக்தி அடைவதற்காக நாம் செய்யக்கூடிய வழிபாடு மட்டுமல்லாமல் நாம் சூரிய பகவானின் அருளை பெறுவதற்கும் ஒரு மிகச்சிறந்த நாளாக இருக்கிறது. ஆக இந்த நாளில் கருப்பு எள் மற்றும் வெல்லம் ஆகியவற்றை நாம் ஒருவருக்கு தானம் செய்வது ஒரு மிக உயர்ந்த பலனை நமக்கு பெற்று கொடுக்கும்.
காரணம் கருப்பு எள் தானம் வழங்கும்போது சனி பகவானால் நமக்கு ஏற்படுகின்ற உடல் உபாதைகளில் இருந்து நாம் விடுபட முடியும். அதேபோல் முன்னோர்களுடைய ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்கும். வெல்லம் நாம் தானம் அளிக்கும் போது ஜாதகரீதியாக சூரிய பகவால் பலவீனமாக இருந்தால் அவரை பலப்படுத்த முடியும். இவ்வாறு செய்யும் பொழுது நமக்கு மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தில் உயரும்.
3. மார்கழி அமாவாசை அன்று நெய் தானம் செய்வது நமக்கு ஒரு மிகச் சிறந்த அதிர்ஷ்டத்தை தேடி கொடுக்கும். நெய் அல்லது நெய் கலந்து உணவுகளை கூட நாம் தானம் செய்யலாம். இதனால் சந்திரன் மற்றும் சனி பகவான் அருள் நமக்கு கிடைத்து மனதில் தெளிவும் வாழ்க்கையில் சந்திக்கின்ற குழப்பங்களும் விலகி ஒரு தெளிவு மற்றும் மன அமைதி கிடைக்கும்.

4. தானங்களில் மிகச்சிறந்த தானமாக தண்ணீர் தானம் இருக்கிறது. ஆதலால் தண்ணீர் பந்தல் அமைப்பது அல்லது தண்ணீர் குழாய் அமைத்துக் கொடுப்பது போன்றவற்றை செய்தாலும் முன்னோர்களுடைய மனமானது மகிழ்ந்து நமக்கு அவர்களுடைய முழு ஆசீர்வாதம் கிடைக்கும்.
அதேபோல் நிறைய வசதி படைத்தவர்களாக இருந்தால் நிச்சயம் வெள்ளிப் பொருட்களை தானம் வழங்கலாம். வெள்ளி சுக்கிரன் மற்றும் சந்திர பகவானுக்குரிய உலோகமாகும். ஆக இவர்கள் வெள்ளியை நாம் ஒரு ஏழை எளியவர்களுக்கு ஏதேனும் முடிந்த அளவில் தானம் செய்யும் பொழுது நிச்சயம் அதற்கான ஒரு பலன் நமக்கு கிடைக்கும்.
5. மார்கழி அமாவாசையில் நவதானியங்களை நாம் தானம் அளிப்பது ஒரு மிகச்சிறந்த தானமாகும். அதாவது 9 வகையான தானியங்களை தானம் செய்ய முடியாவிட்டாலும் அரிசி கோதுமை போன்று ஏதாவது 7 வகையான தானங்கள் நம்மால் முடிந்தவற்றை செய்ய வேண்டும்.
இவ்வாறு நாம் தானம் செய்யும் பொழுது நிச்சயம் நம்முடைய குடும்பத்திற்கு எந்த சூழலிலும் உணவிற்கு பஞ்சமில்லாத நிலை உண்டாகும். அதே போல் பொருளாதார ரீதியாக மனக்கஷ்டங்கள் இருந்தால் அவை விலகி மன அமைதியும் வளர்ச்சியும் தேடிவரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |