நீங்கள் பிறந்த தேதி இதுவா? அப்போ உங்களுக்கு கட்டாயம் காதல் திருமணம் தானாம்
இந்த பூமியில் காதல் எப்பொழுதும் தனித்தன்மை கொண்டது. இன்னும் சொல்லப்போனால் காதல் தான் பல நேரங்களில் நம்மை இந்த உலகை ரசித்து வாழ தூண்டும் அற்புதமான உணர்வாகவும் அமைகிறது.
ஆனால் இந்த காதலில் தான் நிறைய சிக்கல்களும் இருக்கிறது. இந்த காதலை அவ்வளவு எளிதாக எல்லோராலும் வெளிப்படையாக வெளிப்படுத்திட முடியாத நிலையில் அவர்களுடைய குணாதிசயங்கள் இருக்கும்.
ஆனால் ஒரு சிலர் அனைத்து தடைகளையும் மீறி அவர்களுடைய காதலுக்காக நிறைய போராடுகிறார்கள். ஆக இவ்வாறு ஒருவர் காதல் திருமணம் செய்யவும் காதலை தைரியமாக வெளிப்படுத்தக்கூடிய தன்மையையும் அவர்கள் பிறந்த தேதி அமைப்புகள் சரியாக இருந்தால் நிச்சயம் கை கொடுத்து விடும். அப்படியாக எந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு கட்டாயம் காதல் திருமணம் நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

எண் 2, 11, 20, 29:
காதல் என்று எடுத்துக் கொண்டால் இந்த எண்களில் பிறந்தவர்கள் நிச்சயம் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். காரணம் இந்த எண்களை ஆளக்கூடிய கிரகம் சந்திர பகவான். மேலும், சந்திரன் தான் ஒரு மனிதனுடைய உணர்வுகள், சிந்தனை போன்ற எல்லா விஷயங்களுக்குமே காரணமாகவும் அமைகிறார். ஆக இந்த எண்களில் பிறந்தவர்கள் இயல்பாகவே ஒரு மனிதர்களிடம் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்வதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். அது மட்டுமல்லாமல் இவர்களுடைய பேச்சுத் திறனால் இவர்கள் காதலை தன்வசமாக்கி கொள்கிறார்கள்.
எண் 6, 15, 24:
இந்த எண்களை ஆளக்கூடிய கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார். சுக்கிர பகவான் தான் ஒரு மனிதனுக்கு அழகு காதல் மற்றும் ஈர்ப்பு தன்மையை கொடுக்கக்கூடியவராக இருக்கிறார். ஆக இந்த எண்களில் பிறந்தவர்கள் பிறரை ஈர்க்கக்கூடிய தன்மையை பிறவியிலே பெற்றிருப்பார்கள். அதனால் இவர்களை பார்த்தாலே எல்லோருக்கும் பிடிக்கும் விதத்தில் இருப்பார்கள். மேலும், இவர்களின் காதலை மிக தைரியமாக வெளிப்படுத்துவார்கள். இதனால் இந்து எண்களில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் காதல் திருமணமே நடைபெறுகிறது.
எண் 9, 18, 27:
இந்த எண்களை ஆளக்கூடிய கிரகமாக செவ்வாய் பகவான் இருக்கிறார். செவ்வாய் தான் ஒரு மனிதனுக்கு வீரம், வலிமை போன்றவற்றுக்கு காரணியாக இருக்கிறார். ஆக இவர்கள் தோற்றமும் வலிமையானதாக இருக்கிறது. அதனால் இவர்களுடைய வீரமான குணத்திற்கும் வலிமை நிறைந்த செயல் திறனுக்கும் பலரும் காதல் வயப்படுவதுண்டு. அது மட்டும் அல்லாமல் எந்த சூழ்நிலைகயிலும் எதற்காகவும் இவர்கள் பயந்து பின் தங்காத நபர்கள். ஆதலால் இவர்களுடைய குணமே இவர்களை காதலை நோக்கி நகர்த்தி காதலின் வெற்றி அடையவும் செய்து விடுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |