இந்த 3 ராசியில் பிறந்த பெண்களுக்கு தங்க தட்டில் வைத்து தாங்கும் கணவன் கிடைப்பார்களாம்
இந்த பூமியில் எல்லாமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. அப்படியாக நமக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு விஷயமும் விதி என்ற பெயரினால் ஏற்கனவே எழுதப்பட்டது. அது சரியான நேரத்தில் நம் கைகளுக்கு கட்டாயம் கிடைத்து விடும். அந்த வகையில் ஒரு குழந்தை வளர்ந்து பருவம் அடைந்த பிறகு அவர்களுக்கு ஒரு முக்கியமான கட்டம் என்றால் திருமணம் தான்.
ஆக, இந்த திருமண வாழ்க்கை சரியாக அமைந்து விட்டால் நிச்சயம் அவர்களை போல் மகிழ்ச்சியாக யாராலும் வாழ முடியாது. அப்படியாக, குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த பெண்களுக்கு அவர்களை தங்கத்தட்டில் வைத்து தாங்க கூடிய அளவிற்கு ஒரு தங்கமான கணவர் கிடைப்பார்களாம். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்த பெண்கள் அன்பைக் கொண்டு அவர்களுடைய ஆளுமையை வெளிப்படுத்துவார்கள். ஆதலால் அவர்களுடைய கணவர் இவர்களுடைய அன்பிற்கு அடிமையாகி அவர்களை எப்பொழுதும் கவனமாக பார்த்துக் கொள்வார்களாம். அது மட்டுமல்லாமல் மிதுன ராசிக்கு கிடைக்கக்கூடிய கணவர்கள் இவர்கள் சொல்பேச்சை மீறி எதையும் செய்யமாட்டார்கள். ஜாடிக்கு ஏற்ற மூடி போல் இவர்கள் சிறப்பாக வாழ்வார்களாம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு எதையும் பார்த்து பார்த்து செய்யக்கூடிய நபர்கள். ஆதலால் இவர்களை சுற்றியுள்ளவர்கள் மத்தியில் இவர்களுக்கு எப்பொழுதும் ஒரு நற்பெயர் இருக்கும். ஆதலால் கணவனும் இவர்களுடைய அன்பை புரிந்து கொண்டு சரிசமமாக இவருடைய அன்பையும் காதலையும் பகிரக் கூடியவராக இருப்பார். மேலும் விருச்சிக ராசி பெண்களுக்கு கிடைக்கக்கூடிய கணவர் அந்த நபருக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று தெரிந்து வைத்து அன்பை கொடுக்கக் கூடியவர்.
மீனம்:
மீன ராசி பெண்களுக்கு கிடைக்கக்கூடிய கணவர் மிகவும் அதிர்ஷ்டசாலி. இவர்களுடைய கணவர் மனைவிக்காக எதையும் செய்ய துணியக் கூடியவர்கள். மேலும், மீன ராசியில் பிறந்த பெண்களுடைய கணவன் இவர்கள் சொல்பேச்சை மீறி எந்த ஒரு செயலிலும் இவர்கள் ஈடுபட மாட்டார்கள். மனைவியிடம் எதையும் மறைக்காத ஒரு வெளிப்படையான தன்மையை கொண்டு இருப்பார்கள். ஆதலால் இவர்களுக்கு இடையே ஒரு நெருக்கமும் ஒரு காதலும் அதிக அளவில் இருக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |