2026 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் கிரிவலம் போறிங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க

By Sakthi Raj Dec 18, 2025 07:31 AM GMT
Report

நினைத்தாலே முக்தி தரக்கூடிய ஆலயம் என்றால் அது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம் தான். திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டும் அல்லது திருவண்ணாமலையில் நினைத்து உருக வேண்டும் என்றாலே ஈசன் அருள் இருந்தால் மட்டுமே முடியும்.

அப்படியாக திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய முக்கிய விசேஷம் என்றால் அங்கு பௌர்ணமி தினங்களில் நடக்கக்கூடிய கிரிவலம் தான். மேலும், இங்கு கிரிவலம் செல்வதற்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் மாநிலங்களிலிருந்தும் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வழிபாடு செய்ய வருகை தருகிறார்கள்.

காரணம் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று ஒருவர் வழிபாடு செய்யும் பொழுது அவர்களுடைய கர்ம வினைகள் மற்றும் அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி ஒரு புதிய மனிதராக அவர்கள் உருவெடுப்பார்கள் என்ற ஒரு நம்பிக்கை உண்டு.

2026 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் கிரிவலம் போறிங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க | 2026 Tiruvannamalai Pournami Girivalam Dates 

2025 மார்கழி அமாவாசை: இந்த 5 விஷயங்கள் செய்ய கட்டாயம் மறக்காதீங்க

2025 மார்கழி அமாவாசை: இந்த 5 விஷயங்கள் செய்ய கட்டாயம் மறக்காதீங்க

மேலும் பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்லும் பொழுது நாம் தேவர்களும் ரிஷிகளும், சித்த புருஷர்களும் நமக்கு ஆசிர்வதிப்பதாக சொல்கிறார்கள். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு நீங்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல வேண்டும் என்று நினைத்தால் எந்த தினங்களில் கிரிவலம் செல்லலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

இந்த நாட்களில் நீங்கள் கிரிவலம் சென்று வழிபாடு செய்யும் போது நிச்சயம் ஈசனின் அருளால் உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமையும். 

Numerology: உங்களுக்காக 2026- ல் என்ன காத்திருக்கிறது தெரியுமா?

Numerology: உங்களுக்காக 2026- ல் என்ன காத்திருக்கிறது தெரியுமா?

2026ல் கிரிவலம் செல்ல உகந்த நேரம்:

பெளர்ணமி நாட்கள்கிரிவலம் துவங்கும் நாள், நேரம்கிரிவலம் நிறைவு செய்யும் நாள், நேரம்
ஜனவரி 03ஜனவரி 02 மாலை 06.11 மணிஜனவரி 03 மாலை 04.07 மணி
பிப்ரவரி 01பிப்ரவரி 01 காலை 05.34 மணிபிப்ரவரி 02 காலை 04.05 மணி
மார்ச் 03மார்ச் 02 மாலை 05.59 மணி மார்ச் 03 மாலை 05.21 மணி
ஏப்ரல் 01ஏப்ரல் 01 காலை 07.23 மணிஏப்ரல் 02 காலை 07.44 மணி
மே 01ஏப்ரல் 30 இரவு 09.50 மணிமே 01 இரவு 11.07 மணி
மே 31மே 30 பகல் 12.58 மணிமே 31 பகல் 02.50 மணி
ஜூன் 29ஜூன் 29 காலை 04.23 மணிஜூன் 30 காலை 6 மணி
ஜூலை 29ஜூலை 28 காலை 07.27 மணிஜூலை 29 காலை 08.54 மணி
ஆகஸ்ட் 27ஆகஸ்ட் 27 காலை 09.46 மணிஆகஸ்ட் 28 காலை 10.22 மணி
செப்டம்பர் 26செப்டம்பர் 25 காலை 11.06 மணிஆகஸ்ட் 28 காலை 10.22 மணி
அக்டோபர் 25அக்டோபர் 25 காலை 11.25 மணிஅக்டோபர் 26 காலை 10.09 மணி
நவம்பர் 24நவம்பர் 23 காலை 11 மணிநவம்பர் 24 காலை 9 மணி
டிசம்பர் 23டிசம்பர் 23 காலை 09.57 மணிடிசம்பர் 24 காலை 07.40 மணி
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.






+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US