2026 வைகாசி விசாகம்: முருகப்பெருமானை வழிபாடு செய்ய உகந்த நேரம் எது?

By Sakthi Raj May 30, 2026 04:36 AM GMT
Report

முருகப்பெருமானுக்குரிய வழிபாட்டு தினங்களில் முக்கியமான நாளாக வைகாசி விசாகம் இருக்கிறது. அதாவது, வைகாசி மாதத்தில் வரக் கூடிய விசாகம் நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் இணைந்து வரும் நாளில் முருகப் முருகப்பெருமான் அவதரித்தார் என்பது புராணம்.

இந்த நாளில் நாம் முருகப்பெருமானை மனதார வழிபாடு செய்யும் பொழுது முருகப்பெருமானின் அருளால் நம் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், வைகாசி விசாக தினத்தன்று பெரும்பாலான முருகன் கோவில்களில் பால்குட உற்சவங்கள் சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெறும்.

அந்த வகையில், வைகாசி விசாக தினத்தன்று முருகப்பெருமானை எந்த நேரத்தில் எவ்வாறு வழிபாடு செய்தால் நமக்கு முழு பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

2026 வைகாசி விசாகம்: முருகப்பெருமானை வழிபாடு செய்ய உகந்த நேரம் எது? | 2026 Vaikasi Visagam Worship Pooja Timing

உங்களை கோடீஸ்வரராக மாற்றும் சக்தி வாய்ந்த எளிய பரிகாரங்கள்

உங்களை கோடீஸ்வரராக மாற்றும் சக்தி வாய்ந்த எளிய பரிகாரங்கள்

வைகாசி விசாகம் 2026 வழிபாட்டு நேரம் :

வைகாசி விசாகம் 2026மே 30 சனி
பெளர்ணமி திதி துவக்கம்மே 30 பகல் 12.55
பெளர்ணமி திதி நிறைவுமே 31 பகல் 02.45
விசாகம் நட்சத்திரம் துவக்கம்மே 29 பகல் 12.04
விசாகம் நட்சத்திரம் நிறைவுமே 30 பகல் 02.18
வழிபாட்டு நேரம்மே 30 காலை 06.00 - 07.00, காலை 07.35 - 08.45, காலை 10.35 - பகல் 01.20

2026 வைகாசி விசாகம்: முருகப்பெருமானை வழிபாடு செய்ய உகந்த நேரம் எது? | 2026 Vaikasi Visagam Worship Pooja Timing

வைகாசி விசாகம் முருகனை வழிபடும் முறை :

வைகாசி விசாகம் அன்று அதிகாலை எழுந்து குளித்து பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நாளில் பலரும் முருகப்பெருமானுக்கு பால் குடம் எடுத்து வழிபாடு செய்வார்கள். அவ்வாறு பால்குடம் எடுத்து வழிபாடு செய்ய முடியாதவர்கள் முருகன் ஆலயங்களில் அபிஷேகங்களுக்கு பால் வாங்கி கொடுத்து நம்முடைய பிரார்த்தனையை செய்யலாம்.

இவ்வாறு கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும் கவலை இல்லாமல் வீடுகளில் முருகன் திருவுருவப்படத்திற்கு முன்பாக பால் காய்ச்சி அதனுடன் தேன் அல்லது சர்க்கரை கலந்து ஒரு டம்ளரில் வைத்து வழிபாடு செய்யலாம்.

பிறகு முடிந்தவர்கள் நெய்வேத்தியமாக முருகப்பெருமானுக்கு சர்க்கரை பொங்கல், பாயாசம், திணை மாவு ஆகிவை படைத்தும் வழிபாடு செய்யலாம்.

2026 பாபா வாங்கா கணிப்பின்படி இந்த வருட இறுதிக்குள் ஜாக்பாட் அடிக்க போகும் 3 ராசிகள்

2026 பாபா வாங்கா கணிப்பின்படி இந்த வருட இறுதிக்குள் ஜாக்பாட் அடிக்க போகும் 3 ராசிகள்

உங்களால் இதை செய்ய முடியவில்லை என்றாலும் வருத்தம் தேவை இல்லை. முருகப்பெருமானுக்கு வெற்றிலை பாக்கு படைத்தும் நீங்கள் உங்களுடைய வேண்டுதலை வைக்கலாம்.

வைகாசி விசாக தினத்தன்று நாம் முருகப்பெருமானை மனதில் நிறுத்தி முருகப்பெருமானுக்குரிய மந்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும். குறிப்பாக கந்த குரு கவசம், கந்த சஷ்டி கவசம் முருகப்பெருமானுடைய "ஓம் சரவணபவ" என்கின்ற மந்திரம் இவைகள் எல்லாம் பாராயணம் செய்யும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகின்ற குறைகள் விலகி மகிழ்ச்சி கிடைக்கிறது.

இவை எல்லாம் விட ஒவ்வொரு வழிபாட்டிலும் நம்பிக்கைதான் மிகவும் முக்கியமாக இருக்கிறது. அந்த வகையில் முழு நம்பிக்கையோடு இந்த வைகாசி விசாக தினத்தன்று முருகப்பெருமானை நினைத்து வழிபாடு செய்யும் பொழுது கட்டாயமாக உங்கள் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மாற்றங்களை நீங்கள் பார்க்கலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US