சொந்த வீட்டிற்கு செல்லும் சுக்கிரன்.. வீடு கார் வாங்கி மகிழப் போகும் ராசிகள் யார் ?

By Sakthi Raj Jul 10, 2026 10:26 AM GMT
Report

ஜூலை 16ஆம் தேதி சுக்கிர பகவான் அவருடைய சொந்த நட்சத்திரமான பூர நட்சத்திரத்திற்கு நுழைகிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை திடீர் வீடு, கார் வாங்கக்கூடிய யோகம், தொழிலில் முன்னேற்றம் அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

ஜோதிட சாஸ்திரப்படி குறிப்பிட்டு சில ராசிகள் ஒரு சில கால நேரத்தில் அவர்களுடைய ராசிகளின் இடத்தை மாற்றுவார்கள்.

அந்த வகையில், திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சுக்கிர பகவான் ஜூலை 16ஆம் தேதி காலை 7.11 மணிக்கு பூர நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். பூரம் சுக்கிர பகவானின் சொந்த நட்சத்திரமாகும். இந்த பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் எந்த ராசிகள் மகிழ்ச்சியாக இருக்க போகிறார்கள் என்று பார்ப்போம்.

31 தானங்களும் பலன்களும்.. உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆன்மீக ரகசியம்

31 தானங்களும் பலன்களும்.. உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆன்மீக ரகசியம்

சொந்த வீட்டிற்கு செல்லும் சுக்கிரன்.. வீடு கார் வாங்கி மகிழப் போகும் ராசிகள் யார் ? | 2026 Venus Transit In Puram Natchiram Prediction

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் மகிழ்ச்சியான செய்தியை கொடுக்கப்போகிறது. பணவரவு எதிர்பார்த்த இடங்களில் இருந்து இவர்கள் கைகளுக்கு வந்து சேரும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். சொந்த பந்தங்கள் மத்தியில் இவர்களுடைய பெயர், புகழ் உயரும். நினைத்த பொருட்களை வாங்கக்கூடிய யோகமும், வீடு வாங்கக்கூடிய அமைப்பு உருவாகும்.

சிம்மம்:

இந்த காலகட்டம் நீங்கள் உங்களுக்கான நேரத்தை செலவிடுவீர்கள். புதிய வாய்ப்புகள் வேலையில் தேடி வரும். உங்களுடைய பேச்சில் இனிமை காணப்படும். உங்களுடைய பேச்சு திறனால் முக்கிய காரியத்தை நிறைவேற்றுவீர்கள். சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனை விலகும். ஒரு சிலருக்கு பொன் பொருள் நகை சேர்க்கை உருவாகும். வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாகும்.

நீங்கள் மிதுன ராசி லக்னத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கை முழு பலன் இதோ

நீங்கள் மிதுன ராசி லக்னத்தில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கை முழு பலன் இதோ

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த விஷயங்கள் கைக்கூடி வரப்போகிறது. ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் பிறப்பதற்கான யோகம் உருவாகும். திருமண பலன் கைகூடிவரும், எதிர்பாராத இடங்களில் இருந்து உங்களுக்கு உதவியும் ஆடம்பரமான வாழ்க்கையும் அமையப் போகிறது, ஒரு சிலருக்கு இந்த கா.லகட்டங்களில் கைகளுக்கு வராத பணம் கைகளுக்கு வந்து சேரும் 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US