2026: ஆடிப்பெருக்கு எப்பொழுது? தாலி கயிறு மாற்ற உகந்த நேரம் எது ?

By Sakthi Raj Jul 21, 2026 11:30 AM GMT
Report

ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு என்பது மிகவும் விசேஷமான நாளாக பார்க்கப்படுகிறது. ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடக்கூடிய இந்த பண்டிகை கிராமப் பகுதிகளில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

மேலும், கிராமத்தில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபாடு செய்கின்றனர். ஆடிப்பெருக்கு தினத்தன்று ஆறுகளை வணங்கி மக்கள் புனித நீராடுவார்கள். அதுவும் காவிரி நதி பாயும் இடங்களில் இந்த கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

விவசாயிகள் புது வெல்ல நீரை தொழுது தங்களுடைய உழவு பணிகளை தொடங்குவார்கள். அதனால் தான் முன்னோர்கள் "ஆடி பட்டம் தேடி விதை' என்கின்ற பழமொழி சொன்னார்கள்.

2026: ஆடிப்பெருக்கு எப்பொழுது? தாலி கயிறு மாற்ற உகந்த நேரம் எது ? | 2026 When Is Aadi Peruku And Worship Details

2026 சனி வக்ர பெயர்ச்சி: மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்க போகிறது?

2026 சனி வக்ர பெயர்ச்சி: மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்க போகிறது?

அதே போல், ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்கள் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்து இருப்பார்கள். அந்த படித்துறையில் 18 படிகள் கொண்டதாக இருக்கும்.

இந்த ஆடிப்பெருக்கு அன்று நாம் இறைவனை வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு எல்லா செல்வமும் கிடைக்கிறது.

வழிபாடு செய்யும் முறை:

எல்லாராலும் ஆடிப்பெருக்கென்று ஆறுதலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாது. அவர்கள் கவலை கொள்ளாமல் வீட்டிலேயே வித விதமான பலகாரம் சமைத்து வீட்டு,வாசலில் கோலம் போட்டு அலங்கரித்து காவிரியை வைகையை தாமிரபரணியை மனதால் வணங்கி ஆடி பதினெட்டாம் நாளன்று வழிபாடு செய்யலாம்.

பலன்கள்:

ஆடிப்பெருக்கு நாளில் கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் அவர்களுக்கு நல்ல கணவர் மற்றும் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும், ஆடிப்பெருக்கு அன்று புதுமணப் பெண்கள், புதிய மஞ்சள் கயிறை மாற்றிக் கொள்வார்கள். அதை போல் சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள்.

2026: ஆடிப்பெருக்கு எப்பொழுது? தாலி கயிறு மாற்ற உகந்த நேரம் எது ? | 2026 When Is Aadi Peruku And Worship Details

காதல் கைகூட வேண்டுமா?அப்போ வள்ளி மலை முருகன் கோயிலுக்கு போயிட்டு வாங்க!

காதல் கைகூட வேண்டுமா?அப்போ வள்ளி மலை முருகன் கோயிலுக்கு போயிட்டு வாங்க!

இவ்வாறு செய்கின்ற மூலம் கணவரின் உடைய ஆயுள் அதிகரிப்பதோடு நல்ல குழந்தை மற்றும் குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும் என்பது நம்பிக்கை.

2026 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு எப்போது:

2026 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் மூன்றாம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் சுமங்கலி பெண்கள் புதிய மஞ்சள் மற்றும் கயிறு மாற்றிகொள்வதற்கும் கன்னிப்பெண்கள் நல்ல கணவன் வேண்டி பூஜை செய்வதற்கும் காலை 7:45 முதல் 845 மணி வரையிலும் மாலை 3.15 மணி முதல் 4:15 மணி வரையும் மிகச் சிறப்பான நேரமாக இருக்கிறது.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US