2026: ஆடி அமாவாசை எப்பொழுது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்?
ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசை மிகவும் முக்கியமான நாளாக இருக்கிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 12ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது.
அதாவது அம்மாவாசை தேதி ஆகஸ்ட் 12 அதிகாலை 2.11 மணிக்கு துவங்கி அமாவாசை திதி ஆகஸ்ட் 13 அதிகாலை 12.16 மணி அன்று முடிவடைகிறது.

ஆடி மாத சிறப்புகள்:
சூரிய பகவான் ( சிவனும்) சந்திர பகவான் (சக்தியும்) ஒன்று சேர்கின்ற நாளாக இது கருதப்படுகிறது. மேலும், முன்னோர் பித்ரு உலகத்தில் இருந்து வந்து அவர்களுடைய சந்ததியினரை சந்தித்து அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவார்கள்.
ஆதலால், இந்த நாளில் தர்ப்பணம் செய்வது என்பது குடும்பத்தில் அமைதி. பித்ரு தோஷம் சாபங்கள் எல்லாவற்றையும் நீக்குகிறது.

ஆடி அமாவாசை அன்று செய்ய வேண்டிய தானம்:
இன்றைய தினம் நாம் தானம் செய்கின்ற பொழுது நமக்கு மிகப்பெரிய அளவில் புண்ணியம் சேர்கிறது. ஏழைகளுக்கு உணவு, உடை தானம் செய்வது மிகப்பெரிய அளவில் நமக்கு குடும்பத்தில் அமைதியை கொடுக்கிறது. காகம் மற்றும் பிற விலங்குகளுக்கு உணவு வழங்கலாம்.
இவ்வாறு செய்கின்ற பொழுது நிச்சயம் குடும்பத்தில் இருந்த தடைகள் யாவும் விலகும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த நாளில் கட்டாயம் முன்னோர்களுடைய அருளாசியையும் இறைவனுடைய அருளையும் பெறுவதற்கு நாம் தவறக்கூடாது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |