2026: நரசிம்ம ஜெயந்தி எப்பொழுது? இந்த வருடம் ஏன் இவ்வளவு விசேஷமானது தெரியுமா?

By Sakthi Raj Apr 22, 2026 05:33 AM GMT
Report

மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் மிக முக்கியமான மற்றும் மிகவும் உக்கிரமான அவதாரம் என்றால் பக்தன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரம் ஆகும். "நர" என்றால் மனிதன், "சிம்மம்" என்றால் சிங்கம் ஆகும். அதாவது மனித உடலும் சிங்கத்தின் தலையும் கொண்ட அவதாரம் இந்த நரசிம்ம அவதாரம் ஆகும்.

தன்னுடைய சிறு வயது பக்தனான பிரகலாதனின் நம்பிக்கை காப்பாற்ற அசுர அரசன் இரண்யகசபுவை வதம் செய்து உண்மையை நிலைநாட்ட எடுத்த அவதாரமே இந்த நரசிம்ம அவதாரமாகும். மேலும், நரசிம்ம அவதாரம் பக்தர்களுக்கு பெருமாளின் அற்புதத்தை உணர்த்துகிறது.

அதாவது இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்றும் முக்கியமாக பக்தர்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்களுக்கு ஏற்ப எதிலிருந்தும் பெருமாள் அவதாரம் எடுத்து பக்தர்களை காப்பாற்றுவார் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இந்த நரசிம்மாவதாரம் இருக்கிறது.

2026: நரசிம்ம ஜெயந்தி எப்பொழுது? இந்த வருடம் ஏன் இவ்வளவு விசேஷமானது தெரியுமா? | 2026 When Is Narasimha Jeyanthi Date And Timing

மகாபாரதம்: பிறர் எண்ணங்களுக்கு அதிக முக்கியம் கொடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

மகாபாரதம்: பிறர் எண்ணங்களுக்கு அதிக முக்கியம் கொடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

அப்படியாக, பக்தன் பிரகலாதனின் தீராத நம்பிக்கையை காப்பாற்ற மகாவிஷ்ணு நரசிம்ம மூர்த்தியாக அவதரித்த அந்த நன்னாளையை நாம் நரசிம்ம ஜெயந்தியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றோம். அதாவது பாகவத புராணத்தின் படி சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில் தான் நரசிம்மா அவதாரம் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பிரம்மாவிடம் இரணியன் அவனை எந்த ஒரு மனிதனோ, மிருகமோ, ஆயுதத்தாலோ, தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்றும் இரவும் இல்லாத பகலும் இல்லாத ஆகாயமும் இல்லாத பூமியும் இல்லாத வீட்டிற்கு உள்ளும் இல்லாத வெளியும் இல்லாத வகையில் தான் அவனுக்கு மரணம் நிகழ வேண்டும் என்ற வரம் கேட்டு பெற்றான்.

இந்த காரணத்தினால் தான் இரண்யனை நரசிம்மர் வதம் செய்வதற்காக மாலை நேரத்தில் அதாவது பிரதோஷ நேரத்தில் அவதாரம் செய்ததாக சொல்லப்படுகிறது. அப்படியாக, இந்த 2026 ஆம் ஆண்டு நரசிம்ம ஜெயந்தி வருகின்ற ஏப்ரல் 30 வியாழக்கிழமை அன்று வருகிறது. ஏப்ரல் 29 இரவு 9.02 மணிக்கு சதுர்த்தசி திதி துவங்குகிறது.

அது ஏப்ரல் 30 இரவு 9.50 மணி வரை இருக்கிறது. ஆக நாம் நரசிம்ம ஜெயந்தி கொண்டாடுவதற்கு உகந்த நேரமாக ஏப்ரல் 30 மாலை 4.27 மணி முதல் 7 வரை இருக்கிறது.

2026: நரசிம்ம ஜெயந்தி எப்பொழுது? இந்த வருடம் ஏன் இவ்வளவு விசேஷமானது தெரியுமா? | 2026 When Is Narasimha Jeyanthi Date And Timing

எதிரிகள் அடியோடு ஒழிய வேகுப்பட்டி அனுமனை தரிசனம் செய்யுங்கள்

எதிரிகள் அடியோடு ஒழிய வேகுப்பட்டி அனுமனை தரிசனம் செய்யுங்கள்

நரசிம்ம ஜெயந்தி அன்று செய்ய வேண்டியவை:

நரசிம்ம ஜெயந்தி என்று அதிகாலை நேரத்தில் எழுந்து குளித்து நரசிம்மருக்கு விரதம் இருக்க துவங்க வேண்டும். வீடுகளில் பெருமாள் படத்திற்கு துளசி மாலை அணிவித்து பானகம், கற்கண்டு நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

நரசிம்ம ஜெயந்திக்கு மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக பாரனை செய்து விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். மேலும் அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய நரசிம்மர் அல்லது பெருமாள் ஆலயம் சென்று அங்கு நடைபெறக்கூடிய சிறப்பு பூஜைகளிலும் அபிஷேகங்களையும் கலந்து கொண்டு நரசிம்மரின் மந்திரங்களை பாராயணம் செய்வது அவசியம்.

குறிப்பாக நரசிம்ம கவசம் போன்ற மந்திரங்களை நரசிம்ம ஜெயந்தி தினத்தில் பாராயணம் செய்வது என்பது நமக்கு மிகப்பெரிய வலிமையை பெற்றுக் கொடுக்கும். அதோடு பாகவத புராணத்தில் பகவான் நரசிம்மர் அவதார கதையை படிக்கலாம்.

ஏன் விரதம் இருக்க வேண்டும்:

பக்தன் பிரகலாதனுக்காக பெருமாள் எடுத்த நரசிம்ம அவதாரம் உக்கிரமாக இருந்தாலும் மிகவும் மென்மையான மனம் கொண்டவராக இருக்கிறார். ஆக இந்த தினத்தில் நாம் நரசிம்மரை மனதார வழிபாடு செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் தேவை இல்லாத மனிதர்களால் சந்திக்க கூடிய மனக்கஷ்டங்கள் வீடு, நிலம் போன்றவற்றில் இருக்கக்கூடிய சிக்கல்கள் எதிரிகள் தொல்லை இவை எல்லாம் விலகி மனதில் நம்பிக்கையும் வலிமையும் பிறக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US