2027-ல் மூன்று முறை இடம் மாறும் குரு பகவான்.. அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் யார்?

By Sakthi Raj Nov 18, 2026 12:32 PM GMT
Report

 ஜோதிடத்தில் குரு பகவான் சுப கிரகமாக இருக்கிறார். இவர் 12 மாதங்களுக்கு ஒரு முறை அவருடைய ராசியை மாற்றுகிறார். அவருடைய இந்த மாற்றம் 12 ராசிகளுக்கும் பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும்.

அப்படியாக, 2027 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி ஒரு சில ராசிகளுக்கு பெரிய அளவில் ஒரு தாக்கங்களையும் மாற்றங்களையும் கொண்டு வர இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. 2027 ஆம் ஆண்டு குரு பகவான் மூன்று முறை அவருடைய ராசியை மாற்ற இருக்கிறார். தற்போது குரு பகவான் சூரியனுடைய ராசியான சிம்மத்தில் இருக்கிறார்.

வருகின்ற ஆண்டின் துவக்கத்தில் அதாவது ஜனவரியில் சிம்மத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். அதன் பிறகு குரு பகவான் ஜூன் மாதத்தில் மீண்டும் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைகிறார். அதன் பிறகு அந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் கன்னி ராசிக்கு இடம் மாறுகிறார்.

இந்த மூன்று பெயர்ச்சி ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கப்போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2027-ல் மூன்று முறை இடம் மாறும் குரு பகவான்.. அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் யார்? | 2027 Jupiter Transit Bring Wealth To 3 Zodiac

2026: டிசம்பரில் கடக ராசிக்கு உருவாகும் குரு மங்கள யோகம்.. இழந்ததை பெரும் காலம் வந்துவிட்டது

2026: டிசம்பரில் கடக ராசிக்கு உருவாகும் குரு மங்கள யோகம்.. இழந்ததை பெரும் காலம் வந்துவிட்டது

மிதுனம்:

இவர்களுக்கு இந்த காலகட்டம் செல்வம், அதிர்ஷ்ட வாய்ப்புகள் கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. தொழில் ரீதியாக இவர்களுக்கு சிறந்த மாற்றம் காத்திருக்கிறது. எதிர்பார்த்த பொருளாதார முன்னேற்றம் உண்டு. உறவினர்களிடம் கலந்து ஆலோசித்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய பிரச்சினைகளில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். இருப்பினும் தேவையில்லாத பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நன்மையை கொடுக்கும்.

கடகம்:

குரு பெயர்ச்சி கடக ராசியினருக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றமான வாய்ப்புகளை கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. எதிர்பாராத வழிகளில் இருந்து நீங்கள் பொருளாதார முன்னேற்றத்தை பெறுவீர்கள். வேலை செய்யும் இடங்களில் உயர் அதிகாரிகள் பாராட்டுக்கள் மற்றும் புதிய பொறுப்புகள் உங்களுக்கு தேடி வரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வி ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

2026 நவம்பர் 18: திருமணம் முதல் தொழில் முன்னேற்றம் வரை... இன்று எந்த ராசிக்கு யோகம்

2026 நவம்பர் 18: திருமணம் முதல் தொழில் முன்னேற்றம் வரை... இன்று எந்த ராசிக்கு யோகம்

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செல்வமும் அதிர்ஷ்டமும் பெருகப் போகிறது. கல்வி தொடர்பான விஷயங்களில் நல்ல மாற்றமான சூழ்நிலை காணப்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த செயல்களை செய்து மகிழ்வீர்கள். பொருளாதார நெருக்கடிகள் விலகும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். அரசு வழியில் உங்களுக்கு உதவிகள் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு.  

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US