சனிப்பெயர்ச்சி: ஏழரை சனியிலிருந்து விடுபட்டு ராஜயோகம் பெறும் 3 ராசிகள்

By Sakthi Raj May 22, 2026 10:42 AM GMT
Report

 ஜோதிடத்தில் சனிபகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இருக்கிறார். மேலும், ஒருவருக்கு பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்ப அவர்களுக்கு நன்மை தீமையை வழங்க கூடியவராக இருக்கிறார். அந்த வகையில், சனி பகவான் 2027 ஆம் ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 6.32 மணிக்கு மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார்.

அதன் பிறகு வக்கிரப் பெயர்ச்சியாக 2027 ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி மீண்டும் மீன ராசிக்கு திரும்புகிறார். பிப்ரவரி 23 அன்று சனிபகவான் மீண்டும் மேஷ ராசிக்கு வருகிறார். அங்கு 2029 ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை அவர் அங்கிருக்கிறார்.

பிறகு ரிஷப ராசிக்கு செல்கிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு ஏழரை சனியின் காலம் முடிந்து அவர்களுக்கு ராஜயோகம் வர இருப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் எந்த ராசியில் என்று பார்ப்போம்.

சனிப்பெயர்ச்சி: ஏழரை சனியிலிருந்து விடுபட்டு ராஜயோகம் பெறும் 3 ராசிகள் | 2027 Sani Mesha Rasi Peyarchi Bring Luck To 3 Rasi

சிம்மம்:

இவர்களுக்கு சனியின் கெடுதலான பிடியிலிருந்து விடுபட போகிறார். ஆதலால் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். வாக்குவாதம் சண்டை போன்ற பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

தடைபட்ட காரியங்கள் மீண்டும் தொடரும். பொருளாதார நிலை நல்ல முன்னேற்றத்தை பெறும். வீண் செலவுகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டுபிடிப்பீர்கள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி மிகவும் சுபமான பலன்களை கொடுக்க இருக்கிறது. இவர்களுக்கு நிரந்தரமான சனியின் பாதிப்பிலிருந்து நிரந்தரமான விடுதலை கிடைக்கப்போகிறது. இதனால் இவர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். புதிய முதலீடுகள் செய்வதற்கான கால சூழ்நிலைகள் அமையும்.

நிம்மதியான வாழ்க்கை வாழ கிருஷ்ணர் சொல்லும் எளிய அறிவுரைகள்

நிம்மதியான வாழ்க்கை வாழ கிருஷ்ணர் சொல்லும் எளிய அறிவுரைகள்

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த பெயிற்சியானது இவர்கள் வரப் பிரசாதமாகவே அமையப்போகிறது. இவர்கள் நீண்ட நாட்கள் ஏழரை சனி பிடியிலிருந்து விடுதலை பெற போகிறார்கள். சனி பகவான் உங்கள் ராசிநாதன் என்பதால் உங்களுக்கு அவருடைய சிறப்பு ஆசிர்வாதம் எப்பொழுதும் இருக்கும். மன அழுத்தம் நீங்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுத்திர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US