நிம்மதியான வாழ்க்கை வாழ கிருஷ்ணர் சொல்லும் எளிய அறிவுரைகள்
இந்த உலகத்தில் கிருஷ்ண பகவான் போல் தன்னுடைய பக்தர்களை எவராலும் காத்தருள முடியாது. அந்த அளவிற்கு கிருஷ்ணர் அவரின் பக்தர்கள் மீது அதீத அன்பு வைத்திருக்கிறார். எவர் ஒருவர் கிருஷ்ணா என்று கிருஷ்ணர் மீது அன்பு மழை பொழிகிறார்களோ அந்த பக்தனுக்காக கிருஷ்ணர் சேவை செய்ய எப்பொழுதும் காத்திருக்கிறார்.
அப்படியாக, மகாபாரதம் எனப்படும் காவியத்தில் கிருஷ்ண பகவான் மனிதர்கள் கவலை இல்லாமல் மன அமைதியோடு வாழ நமக்கு சில அறிகுறிகள் சொல்கிறார். அதை பற்றி பார்ப்போம்.

மனிதர்களிடம் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான தீய குணங்களில் ஒன்று இழந்ததை எண்ணி வருத்தப்பட்டு கொண்டு இருப்பது. ஆக, மனிதர்களுடைய இழப்பை எண்ணி வருந்துவது இயல்பு என்றாலும் அதை நாம் பிடித்து வைத்திருக்கின்ற பொழுது துன்பம் நம்மை துரத்திக் கொண்டே இருக்கிறது.
மேலும், நாம் எதைப் பிடித்து வைத்திருக்கின்றோமோ அது நம்மிடமே இருப்பதில்லை. எல்லாம் ஒரு நாள் நம்மை விட்டு விலகக் கூடியது. இந்த வாழ்க்கை என்பது ஒரு பிடிமானம் இல்லாத ஒரு ஓட்டமாகும். நமக்கானது நம்மை வந்து சேரும். நம்மை விட்டு விலகுவது கட்டாயமாக ஒரு நாள் சென்றுவிடும்.
அதனால், நாம் ஒரு விஷயத்தை பிடித்துக் கொண்டால் மன வலி தான் அதிகமாகும், அங்கு மன அமைதி கிடைப்பதில்லை. ஆக, ஒன்றை பிடித்து வைப்பதை விடவும் அதை விட்டு விட்டால் நிம்மதி பிறக்கும்.

அதனால் நாம் பிடிவாதம் கொண்டு ஒரு விஷயத்தை பிடித்துக் கொண்டிருப்பதை தவிர்த்து அதை விட கற்றுக் கொள்ளும் பொழுது வாழ்க்கை எளிமையானதாகவும் மன அமைதி நிறைந்ததாகவும் இருக்கும் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
இதை நம் வாழ்க்கையில் பொருந்தி பார்த்தால் நமக்கும் நிறைய நேரங்களில் பொருத்தமானவையாக இருக்கிறது. எப்பொழுதும் இல்லாததை நினைத்து நாம் பிடித்து வைத்துக் கொண்டு வருந்தி கொண்டிருக்கின்றோம். ஆக, மாயையான விஷயங்களை நாம் விட்டுவிட்டால் வாழ்க்கை நீரோட்டம் போல் எளிமையாக மாறிவிடும் மனக்கவலைகள் விலகிவிடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |