தஞ்சையில் ஒரே இடத்தில் 25 பெருமாள்கள் கருடசேவை வைபவம்
தஞ்சாவூரில் ஆண்டுதோறும் ஒரே இடத்தில் 25 பெருமாள்கள் எழுந்தருளி கருடசேவை வைபவம் நடைபெறுவது மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான கருடசேவை வைபவம் நேற்று புதன்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் இந்த விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.
90-ம் ஆண்டாக நடைபெற்ற இந்த விழா மே 28-ம் திகதி வெண்ணாற்றங்கரை ஸ்ரீ நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்குத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.
பின்னர், வெண்ணாற்றங்கரையிலிருந்து மே 29 ம் தேதி திவ்யதேச பெருமாளுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜ வீதிகளில் வீதியுலா நடைபெற்றது.
இதில், 25 கோயில்களிலிருந்து பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி ராஜ வீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு 25 பெருமாள்களையும் ஒரு சேர கண்டு தரிசித்து பரவசம் அடைந்தனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |