இறை வழிபாட்டில் எந்த கடவுளிடம் என்ன கேட்க வேண்டும் தெரியுமா?
இறை வழிபாடு என்பது எப்பொழுதும் மிகவும் சக்தி வாய்ந்தது. ஆதலால் நாம் இறைவனிடம் வேண்டும்பொழுது நியாயமானதையும் சரியானதையும் கேட்க வேண்டும். சில நேரங்களில் இந்த பிரபஞ்ச சக்தியின் ஆற்றல் ஆனது அதிக அளவில் உங்களை சுற்றி வந்து கொண்டிருக்கும்.
அந்த நேரத்தில் நாம் என்ன வேண்டுதல் வைக்கின்றோமோ அது அப்படியே நடந்து விடும். அதனால் நம்முடைய வேண்டுதல்களிலும் நாம் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு இறைவனும் ஒவ்வொரு அம்சம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
அவர்களிடம் அந்த வரத்தை கேட்டு மனதார வழிபாடு செய்யும் பொழுது நிச்சயம் அந்த வரம் வெகு விரைவில் நடக்கும். அப்படியாக எந்த தெய்வத்திடம் என்ன வரம் கேட்டால் நமக்கு கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

தெய்வங்களும், வேண்டுதல்களும் :
1.சிவபெருமான் - மன அமைதியும் எதன் மீதும் பற்றில்லாத வாழ்க்கையும் நீங்கள் விரும்பினால் நிச்சயம் சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள்.
2. குழந்தை வரம் - நீண்ட நாட்களாக திருமணத்தில் தடை மற்றும் தாமதம் அல்லது குழந்தை பாக்கியத்தில் தடை போன்ற மன வருத்தங்களை சந்திப்பவர்கள் முருகப்பெருமானை தொடர்ந்து வழிபாடு செய்து அவருடைய திருப்புகழை பாராயணம் செய்தல் நிச்சயம் 48 நாட்களில் நல்ல விடை கிடைக்கும்.
3. குபேரன் - செல்வத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடியவர் குபேரன். நீங்கள் பொருளாதார பின்னடைவில் இருக்கிறீர்கள் என்றால் நிச்சயம் குபேரனை வழிபாடு செய்தால் நல்ல வரம் கிடைக்கும்.
4. மகாலக்ஷ்மி - உங்கள் வீடுகளில் மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் மகாலட்சுமி வழிபாடு செய்வதை தவிர்த்து உங்களுக்கு வேற வழியே இல்லை.
5. முனீஸ்வரன் - உங்களை சுற்றி தீய விஷயங்கள் நடக்கிறது என்றால் முனீஸ்வரனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள் நெற்றிடம் தீமையிலிருந்து விடுபடலாம்.
6. யம தர்மன் - மரண பயம் நீங்க எமதர்மனை மனதில் நினைத்து வழிபாடு செய்து கொள்ளுங்கள்.
7. கருப்பசாமி - சக மனிதர்களாலே உங்களுக்கு துன்பம் உங்களுடைய நீதி இழந்துவிட்டது என்று எண்ணினால் கருப்பசாமி கை பிடித்துக் கொள்ளுங்கள் நீதியை காப்பாற்றிக் கொடுப்பார்.
8. மகாவிஷ்ணு - விரைவில் திருமணம் நடக்க மகாவிஷ்ணுவை பற்றி கொள்ளுங்கள்.
9. அனுமன் - உடல் வலிமையும் மன வலிமையும் பெற்று நினைத்த காரியங்களில் வெற்றி பெற அனுமனை வழிபாடு செய்யுங்கள்.
10. ஐயப்பன் - நீங்கள் நினைத்தது நிறைவேற ஐயப்பனை வழிபாடு செய்யுங்கள்.
11. ஸ்ரீ ராமர் - காதல் கை கூடி வருவதற்கும் தடையின்றி திருமணம் நடைபெறவும் ஸ்ரீ ராமரை பற்றி கொள்ளுங்கள்.
12. விநாயகர் - கிரக தோஷங்கள் கிரக பாதிப்புகள் விலக விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.
13. அம்பிகை - கண் திருஷ்டி மற்றும் தீய ஆற்றல்களில் இருந்து விடுபட அம்பிகையை வழிபாடு செய்யுங்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |