வாஸ்து: இந்த பொருட்கள் வீடுகளில் இருந்தால் அபசகுனம் உண்டாகுமாம்
வாஸ்து ரீதியாக எப்படி நம் வீடுகளில் ஒரு சில பொருட்களை வைத்தால் அதிர்ஷ்டம் கொடுக்குமோ அதே போல் வீடுகளில் ஒரு சில பொருட்களை வைக்கும் பொழுது சில தீய விளைவுகளை கொடுக்கிறது. அந்த வகையில் வீடுகளில் வாஸ்து ரீதியாக வைக்ககூடாது பொருட்களை பற்றி பார்ப்போம்.
1. வீடுகளில் ஒரு பொழுதும் உடைந்த கடிகாரம் அல்லது ஓடாத கடிகாரம் வைக்கக்கூடாது. இவ்வாறு வீடுகளில் இருக்கும் பொழுது அவை நமக்கு மிக பெரிய அளவில் பொருளாதார இழப்பையும் பாதிப்பையும் கொடுக்கிறது.
2. அதே போல் வீடுகளில் கற்றாழை வைக்கும் பொழுது சில தீய விளைவுகளை கொடுக்கக்கூடும். அதனால் முடிந்த வரை கற்றாழை வைப்பதை தவிர்த்து விடுங்கள்.
3. வாஸ்து ரீதியாக படுக்கைக்கு அடியில் சில பொருட்களை வைப்பதும் நமக்கு தீய விளைவுகளை கொடுக்கக்கூடும். இவ்வாறு வைக்கும் பொழுது நமக்கு ஒரு நல்ல உறக்கம் இன்மையையும் சிந்தனைகளில் தடுமாற்றத்தையும் கொடுத்து விடும்.
4. ஒரு பொழுதும் வீடுகளில் பழைய நாட்காட்டிகளை வைக்காதீர்கள். பழையதை நம் அவ்வப்போது வீடுகளில் இருந்து கழித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது தான் புதிய விஷயம் நம் வீடுகளில் எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கக்கூடும்.
5. ஒரு பொழுதும் வீடுகளில் சண்டையிடும் புகைப்படங்களை வைக்காதீர்கள். அதே போல் கத்தி மற்றும் கூர்மையான எந்த ஒரு வரைபடங்கள் வைப்பதையும் தவிர்த்து விடுங்கள். இவை குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகளை உண்டு செய்துவிடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |