கோயிலின் உள்ளே செய்யக்கூடாத 26 தவறுகள்- பத்ம புராணத்தின் ரகசியம்

By Yashini Jul 28, 2025 05:38 AM GMT
Report

பொதுவாக இறை வழிபாட்டில் நாம் ஈடுபடும்போது கவனத்துடனும் முழு அர்ப்பணிப்பு உணர்வோடும் இருக்க வேண்டும்.

நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் பிரார்த்தனையின் நோக்கத்தை அடைய விடாமல் செய்து விடலாம்.

அந்தவகையில், இந்து மதத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பத்ம புராணத்தில், இறை வழிபாட்டில் செய்யக்கூடாத சில தவறுகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

கோயிலின் உள்ளே செய்யக்கூடாத 26 தவறுகள்- பத்ம புராணத்தின் ரகசியம் | 26 Mistakes You Should Not Make In The Temple

செய்யக்கூடாத 26 தவறுகள்

1. கோயிலுக்கு செல்லும்போது எப்போதும் குளித்துவிட்டு தூய்மையாக செல்ல வேண்டும்.

2. கோயிலுக்குள் நுழைந்த பின்னர் தேவையற்ற விஷயங்களை நினைக்காமல் இருக்க வேண்டும்.

3. கோயிலில் இறைவனை எதிர்கொள்ளும்போது வணங்காமல் இருக்கக்கூடாது.

4. இறைவனை ஒரு கையால் எப்போதும் வணங்கக்கூடாது.

5. கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதங்களை பணிவுடன் இரண்டு கைகளால் பெற வேண்டும்.

6. கோயிலுக்குள் வாகனங்கள் மீது அமர்ந்து செல்வதும், காலணிகளை அணிந்து செல்வதும் தவறு.

7. கோயிலில் உள்ளே பொய் பேசுவதும், மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசுவம் கூடாது.

8. கோயிலின் உள்ளே சத்தமாகப் பேசுவதும், அதிகாரம் செலுத்துவதும் கூடாது.

9. கோயிலின் உள்ளே அதிகாரத்தைப் பயன்படுத்துவதும் சிபாரிசுகளை பயன்படுத்துவதும் கூடாது.

10. கோயிலில் வாக்குவாதம் செய்வதும் அல்லது சண்டையிடுவதும் கூடாது.

11. நடை சாத்திய பிறகு சன்னிதியை சுற்றி வரக்கூடாது.

12. கோயிலினுள் எந்த அசுத்தமும் செய்யாமல் ஆலயத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

13. கோயில் நடை திறந்து இருக்கும் நேரத்தில் கோயில் வளாகத்தினுள் தூங்கக் கூடாது.

14. கடவுள் சிலை அமைந்திருக்கும் பீடத்தை விட உயரமான இடத்தில் உட்காரக் கூடாது.

15. சன்னிதிக்கு எதிர்புறம் கால்களை நீட்டி அமரக்கூடாது. எப்போதும் கால்களை சம்மணமிட்டுதான் அமர வேண்டும்.

16. இறைவனுக்கு நிவேதனம் படைக்கும் முன்னர் பிரசாதத்தை சாப்பிடக் கூடாது.

17. பயன்படுத்திய எந்தப் பொருளையும் கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுக்க கூடாது.

18. இறைவனின் முன்பாக ஒருவரின் காலில் விழுவதோ, ஆசி பெறுவதோ கூடாது.

19. கடவுளுக்கு எதிரில் எவரையும் தண்டிப்பது பெரிய பாவம்.

20. கோயிலில் கடுமையான வார்த்தைகளைப் பேசுவது தவறு.

21. கோயிலுக்கு கருப்பு உடை அணிந்துகொண்டோ முகத்தை மூடிக் கொண்டோ செல்லக் கூடாது.

22. கோயிலில் அமர்ந்து தன்னைத்தானே புகழ்ந்து கொள்வது கூடாது.

23. கோயிலில் இருக்கும்போது ஒருவரை விமர்சிப்பதும் புறம் கூறுவதும் தவறு.

24. கடவுளுக்கு முன்பாக வேறொருவரைப் புகழ்ந்து பேசுவது கூடாது.

25. திருவிழாக்களையும் பண்டிகைகளையும் புறக்கணிக்கக் கூடாது.

26. பிறருக்குக் கிடைப்பதை தனக்கு கெடுக்கும்படி எந்த ஒரு வேண்டுதலும் இருக்கக் கூடாது.       

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.   


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US