வீட்டில் உள்ள கஷ்டங்கள் விலக செய்ய வேண்டிய 27 எளிய பரிகாரங்கள்
மனிதனுக்கு இறை வழிபாடு என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். அவன் கர்ம வினைகளால் சந்திக்கும் துன்பத்தில் இருந்து வெளியே வர இறைவழிபாடு மட்டுமே மன அமைதியை கொடுக்கும். அப்படியாக, குடும்பத்தில் உண்டாகும் பிரச்சனைகளில் இருந்து விடுபட செய்யவேண்டிய 27 எளிய பரிகாரங்கள் பற்றி பார்ப்போம்.
1️. குடும்பத்தில் கணவன் மனைவி சண்டையை சந்திப்பவர்கள் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் அமைதி கிடைக்கும்.
2. சிலர் வீட்டில் உறவுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.அவர்கள் நாகராஜா சிலைக்கு மஞ்சள் குங்குமம் வைத்து செவ்வரளிப் பூ சாற்றி அபிஷேகம் செய்தால் மன அமைதி கிடைக்கும்.
3️. குழந்தைகள் உடல் ஆரோக்கியம் சிறக்க அருகில் உள்ள ஆலயம் சென்று வெள்ளி செவ்வாய் விளக்கு ஏற்றி வரலாம்.
4️. குடும்பத்தில் உண்டான பொருளாதார நஷ்டம் மற்றும் கடன் தொல்லைக்கு ஸ்ரீ யோக நரசிம்மர் மற்றும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது கடன் தொல்லையை விலக செய்யும்.
5️. பில்லி சூனியம் ஏவல் போன்றவற்றால் பாதிக்க பட்டவர்கள் ஸ்ரீ நரசிம்மர் மந்திரம் சொல்லி வர எதிர்மறை சக்திகள் விலகி விடும்.
6️. குடும்பத்தில் ஏற்பட்ட கண் திருஷ்டி விலக ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு எலுமிச்சை பழம் குத்தி வழிபாடு செய்தால் நல்ல நிவாரணம் பெறலாம்.
7️. வீட்டில் வெள்ளெருக்கு விநாயகரை கைக்கு எட்டாத உயரத்தில் வைத்தால் பூதகண சேஷ்டைகள் விலகும்.
8️. சக்கரத்தாழ்வார் சன்னிதியில் 48 நாட்கள் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.
9️. கால பைரவர் சன்னிதியில் 8 செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம பாராயணம் செய்து வழிபாடு செய்தால் கொடுத்த கடன் விரைவில் வசூல் ஆகும்.
10. சனி தோஷத்தால் அவதி படுபவர்கள் திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகமும், சனிக்கிழமையில் சனி பகவானுக்கு தேங்காய் உடைத்தும் வழிபாடு செய்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.
1️1. வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளை கூறினால் தீர்வு கிடைக்கும்.
1️2. பிரதோஷ காலத்தில் ரிஷப ரூட ஈசனை தரிசித்து தீபாரதனை பார்த்தால் நோய்கள் நீங்கும்.
1️3. திருமண தடை உள்ளவர்கள் உத்திர நட்சத்திரத்தில் 11 மாதங்கள் பால் அபிஷேகம் செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.
1️4. தங்கள் வேண்டுதல்கள் எந்த தடையும் இல்லாமல் நிறைவேற இராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்து, கடைசி அரை மணி நேரத்தில், நெய்விளக்கு ஏற்றினால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
1️5. அதே போல், குடும்பத்தில் உண்டான மன கசப்புகள் விலக துர்க்கை அம்மனுக்கு தாமரை தண்டு திரியில் நெய்விளக்கு ஏற்றினால் குடும்ப சாபம் நிவாரணம் பெறலாம்.
1️6. சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட சங்கடங்கள் நீங்கும்.
1️7. இரட்டை பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபட கடன் பிரச்சனைகள் தீரும்.
1️8. நினைத்த வேலை கிடைக்க செவ்வாய் கிழமை தோறும் மூன்று மாதங்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் நினைத்த வேலை கிடைக்கும்.
1️9. அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேல் மீது எலுமிச்சை சாற்றி அபிஷேகம் செய்தால் விபத்துகள் தடுக்கப்படும்.
20. ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி, வில்வ மரம் இவைகள் இருக்கும் இடத்தில் செய்வினை நெருங்காது.
2️1. வீட்டில் கண்ணுக்கு தெரியாத திருஷ்டிகள் விலக வாரம் ஒரு முறை பஞ்சகவ்யம் தெளித்தால் எதிர்மறை சக்திகள் விலகி லஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.
22. நீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், 6 தேய்பிறை அஷ்டமிகளில் கால பைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வந்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
2️3. வியாழக்கிழமையில் விரதம் இருந்து, ஆலய தட்சணாமூர்த்திக்கு நெய்விளக்கு ஏற்றினால் கருத்தரிப்பு ஏற்படும்.
24. கால சர்ப தோஷத்தால் பாதிக்க பட்டவர்கள் கருடாழ்வார் சன்னிதியில் நெய்விளக்கு ஏற்றி சுற்றிவந்தால் சர்ப்ப தோஷத்தால் உண்டாகும் தாக்கம் குறையும்.
25. தானம் செய்தல், பூஜை நடக்காத கோவில்களில் மீண்டும் பூஜை நடக்க உதவி செய்தல், மற்றும் அனாதைப் பிணங்களுக்கு உதவுதல் ஆகியவை பெரிய புண்ணியத்தை சேர்த்து கொடுக்கும்.
2️6. சத்திய நாராயண பூஜையில் பங்கேற்பது, தொழில் முன்னேற்றம், திருமண வெற்றி, குடும்ப ஒற்றுமை ஆகியவற்றை பெருக்கும்.
2️7. தினமும் சுந்தர காண்டம் பாராயணம் செய்தல், மன உறுதியும், கிரக தோஷ நிவாரணமும் பெறுவோம். வாழை தண்டு திரியில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும் நீங்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |