2025 ராகு கேது பெயர்ச்சி எப்பொழுது? அன்று என்ன செய்யவேண்டும்
நவகிரகங்களில் ராகு கேது பெயர்ச்சி என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வாக்கிய பஞ்சாங்கப்படி 26-4-2025 வரும் சனிக்கிழமை அன்று மாலை 4:28 மணிக்கு ராகு கேது பெயர்ச்சி ஆனது நடக்கவிருக்கிறது.
கும்ப ராசிக்கு ராகுவும், சிம்ம ராசிக்கு கேது பகவானும் பெயர்ச்சியாக இருக்கிறார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் ஒரு வித தாக்கம் உண்டாகும். அப்படியாக, ராகு கேது பெயர்ச்சி அன்று நாம் உச்சரிக்க வேண்டிய மந்திரமும் அன்று செய்யவேண்டிய வழிபாட்டை பற்றியும் பார்ப்போம்.
கிரகங்களின் பாதிப்புகளில் இருந்து நாம் பாதுகாத்து கொள்ள இறைவனை பற்றி கொண்டாலே போதும். மனிதர்கள் தாங்கள் செய்த நல்லவை கெட்டவைக்கு ஏற்ப கிரகங்கள் நமக்கு அருள் புரிகிறது.
இது ராகு கேதுவுக்கு மட்டும் பொருந்தாது. எல்லா கிரகங்களும் இதைதான் செய்கிறது. மேலும், நம்முடைய இந்து மதத்தில் இந்த நாக வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை பார்க்க முடியும்.
அனைத்து கடவுள்களுமே பாம்பை தன்னோடு வைத்திருக்கிறார்கள். பெருமாள், சிவன், அம்பாள், முருகர், விநாயகர் எல்லா தெய்வங்களிடத்திலும் நாம் இந்த சர்ப்பத்தை பார்க்கலாம்.
ஆக, சர்ப்பங்கள் கொண்டு அருள்பாலிக்கும் கடவுள்களை வழிபாடு செய்தாலே ராகு கேதுவால் உண்டாகும் பாதிப்புகள் விலகும். அப்படியாக, ராகு கேது பெயர்ச்சியின் பொழுது நாம் சொல்ல வேண்டிய மந்திரங்களை பற்றி பார்ப்போம்.
ராகு காயத்ரி:
நாக த்வஜாய வித்மஹே!
பத்ம ஹஸ்தாய தீமஹி!
தந்நோ ராகு ப்ரசோதயாத்!
கேது காயத்ரி:
அச்வ த்வஜாய வித்மஹே!
சூல ஹஸ்தாய தீமஹி!
தந்நோ கேது ப்ரசோதயாத்!
இந்த மந்திரத்தை மனதார வழிபாடு செய்து உச்சரித்து வர ராகு கேதுவால் உண்டாகும் பாதிப்புகள் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |