ஒவ்வொரு நட்சத்திரகாரர்களுக்கும் உகந்த கோயில்கள் இருக்கிறது.நாம் என்னதான் எல்லா கோயில்களுக்கும் சென்று வழிபாடு செய்தாலும் நமக்குரிய நட்சத்திர கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய நம் வாழ்க்கையில் நடக்கும் விபரீத மாற்றத்தை பார்க்க முடியும்.
அப்படியாக தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது 27 நட்சத்திரக்காரர்களும் தரிசனம் செய்ய வேண்டிய முருகன் கோவில்கள் பற்றி பார்ப்போம்.
1.அஸ்வினி - பழநி முருகன் கோவில், பழநி
2.பரணி - பழமுதிர்சோலை, அழகர்கோவில்
3.கிருத்திகை - வடபழனி முருகன் கோவில், சென்னை
4.ரோகிணி - திருச்செந்தூர் முருகன் கோவில்
5.மிருகசீரிஷம் - குன்றத்தூர் முருகன் கோவில்
6.திருவாதிரை - முத்துகுமார சுவாமி கோவில், பார்க் டவுன்-சென்னை
7.புனர்பூசம் - திருத்தணி முருகன் கோவில்
8.பூசம் - சிறுவாபுரி முருகன் கோவில்
9.ஆயில்யம் - சுவாமிமலை முருகன் கோவில்
10.மகம் - வட்டமலை முருகன் கோவில், காங்கேயம்
11.பூரம் - மருதமலை முருகன் கோவில்
12.உத்திரம் - சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், நாகப்பட்டினம்
13.அஸ்தம் - மயிலம் முருகன் கோவில்
14.சித்திரை - விராலிமலை முருகன் கோவில்
15.சுவாதி - தண்டாயுதபாணி திருக்கோவில், காந்தி பார்க், கோவை
16விசாகம் - சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், சிவன்மலை
17.அனுஷம் - ரத்தினகிரி முருகன் கோவில்
18.கேட்டை - குன்றக்குடி முருகன் கோவில்
19.மூலம் - கந்தக்கோட்டம் முருகன் கோவில், சென்னை
20.பூராடம் - அறுபடை முருகன் கோவில், பெசன்ட் நகர், சென்னை
21.உத்திராடம் - திருவல்லிக்கேணி முருகன் கோவில், சென்னை
22.திருவோணம் - கந்தசாமி திருக்கோவில், புரசைவாக்கம், சென்னை
23.அவிட்டம் - மருதமலை முருகன் கோவில்
24.சதயம் - நங்கநல்லூர் முருகன் கோவில்
25.பூரட்டாதி - திருச்செந்தூர் முருகன் கோவில்
26.உத்திரட்டாதி - குன்றத்தூர் முருகன் கோவில்
27.ரேவதி - திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |