2026: ஜூன் 27இன்று சனி பிரதோஷம்.. இந்த 3 பொருட்கள் கொண்டு பூஜை செய்ய மறக்காதீர்கள்.
சிவபெருமான் வழிபாடுகளில் பிரதோஷம் முக்கிய இடத்தை பெறுகிறது. அதிலும் சனிக்கிழமை வரக்கூடிய பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமானின் அருளையும் சனி பகவானுடைய அருளையும் பெற்று நம் வாழ்க்கையில் நல்ல வளம் பெறலாம்.
அது மட்டுமல்லாமல் சனியால் ஏற்படுகின்ற பாதிப்பு நமக்கு குறைகிறது. அப்படியாக, 2026 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி வருகின்ற சனி பிரதோஷம் மிக முக்கியமான கருதப்படுகிறது. இந்த ஆண்டில் இரண்டாவது சனி பிரதோஷம் ஆகும்.
இதை விட்டால் பிறகு ஜூலை 2027 ஆம் ஆண்டு தான் சனி பிரதோஷம் வருகிறது. அந்த வகையில் சனி பிரதோஷம் அன்று நாம் இந்த மூன்று பொருட்களைக் கொண்டு சுவாமி அபிஷேகம் செய்ய நல்ல பலன்கள் கிடைக்கும். அதை பற்றி பார்ப்போம்.

அபிஷேகம் செய்ய வேண்டிய பொருட்கள்:
1. இன்று நந்தி தேவருக்கு நார்த்தங்காய் வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்தால் நம்முடைய கடன் சுமை குறையும். அதுமட்டுமல்லாமல் நிலம், வீடு வாங்கும் வாங்குவதில் பிரச்சனைகள் இருந்தால் அவை விலகும். அதை போல் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சொந்த வீட்டிற்கு செல்வதில் பிரச்சனை என்றாலும் அதிலிருந்து விடுபடலாம்.
2. வெண்தாமரை பூவை வாங்கி கொடுத்து சிவபெருமானை வழிபாடு செய்வதால் நமக்கு பொருளாதார தொடர்பான எல்லா பிரச்சனைகளும் விலகும். கடன் சுமை நீங்கும். வெண்தாமரை கிடைப்பது அரிது என்று நினைப்பவர்கள் செந்தாமரை வாங்கி கொடுத்து வழிபாடு செய்யலாம்.
3. இளநீர் சிவபெருமானை குளிர் வைக்கக்கூடிய ஒரு அற்புதமான பூஜை பொருளாகும். இளநீர் அபிஷேகம் மிக மிக சிறப்பு வாய்ந்தவை. வீட்டில் இருப்பவர்களுடைய வேலை நிரந்தரமான தன்மை பெறவும், தொழிலில் வளர்ச்சி அடையவும், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய இளநீர் வாங்கி தரலாம்.
அதேபோல், வீடுகளில் பிள்ளைகளுக்கு நீண்ட நாட்கள் வேலை கிடைக்கவில்லை என்று வருந்துபவர்களும் இந்த அபிஷேகம் செய்து வழிபாடு செய்யும்பொழுது அதில் உள்ள தடைகள் யாவும் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |