இந்த 3 கனவுகள் வந்தால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டுமாம்
கனவு என்பது கட்டாயமாக யாராலும் தடுக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. ஒரு சிலருக்கு கனவுகளில் அன்றைய தினம் நடந்த நிகழ்வுகள் வருவதை பார்க்கலாம். ஒரு சிலருக்கு இதுவரை பார்த்திடாத முகங்கள் அவர்கள் கனவுகளில் வருவதை பார்க்கலாம். இன்னும் ஒரு சிலருக்கு முந்தைய நாள் இரவில் வந்த கனவு மறுநாள் அல்லது ஒரு வாரத்திற்குள் அதே நிகழ்வு நடப்பதையும் நாம் பார்க்கின்றோம்.
அப்படியாக, கனவு என்பது அறிவியல் ரீதியாக ஆழ்ந்த உறக்கத்தின் மற்றும் மனநிலையின் வெளிப்பாடு என்றாலும் சாஸ்திரத்தில் சில சமயங்களில் அவை நம் வாழ்க்கையின் தொடர்புடையதாகவும், எதிர்காலத்தில் நடக்கக்கூடியதை பற்றி முன்னதாகவே நமக்கு அறிகுறிகளை உணர்த்தக்கூடிய ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், ஒரு சில கனவுகளுக்கு சாஸ்திர ரீதியாக நல்ல பலன்கள் இருப்பதாகவும் ஒரு சில கனவுகளுக்கு சாஸ்திர ரீதியாக சில தீய பலன்கள் ஏற்படக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படியாக, குறிப்பிட்ட சில மூன்று கனவுகள் உங்களுக்கு வருகிறது என்றால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

1. எண்ணெய் தடவுவது போல் கனவில் வந்தால் என்ன பலன்: சாஸ்திர ரீதியாக ஒருவருடைய கனவில் எண்ணெய் தடவுவது போல் வந்தால் அது மிகவும் அசுபமானதாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு வருகின்ற கனவு நம்மை அறியாமல் நாமே நமக்கு ஒரு பிரச்சனையை உருவாக்குவதின் அறிகுறியாக காணப்படுகிறது.
மேலும், எண்ணெய் தடவுவது போல் கனவு வந்தால் அந்த நபருக்கு உடல் ரீதியான சில பிரச்சனைகள் வரக்கூடும் என்றும் அதனால் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும் என்பதையும் அவை உணர்த்துகிறது.
2. மரம் விழுவது போல் கனவில் வந்தால்: ஒருவருக்கு கனவில் மரம் விழுவது போல் வந்தால் அது மிகவும் மோசமான கனவாக கருதப்படுகிறது. ஒருவருடைய கனவில் எந்த அளவிற்கு பெரிய மரம் கீழே விழுகிறதோ அந்த அளவிற்கு அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் துன்பத்தை சந்திக்க நேரும் என்பதின் அறிகுறியாகும். அதேபோல் இவ்வாறு கனவு வருகின்ற பொழுது ஆரோக்கியத்தலும் வண்டி வாகனத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
3. திருமணம் செய்வது போல் கனவு வந்தால்: கனவு சாஸ்திரத்தின் படி யாரேனும் திருமணம் செய்து கொள்வது போல் கனவு வந்தால் அந்த நபர் வாழ்க்கையில் பிரச்சனை வரலாம் என்றும் அவர்கள் வாழ்க்கை துணையுடன் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதின் அறிகுறியாகும்.

பரிகாரம்:
வாழ்க்கையில் ஒரு தத்துவம் உண்டு. நமக்கு வந்த நோயை விடவும் மிகவும் கொடுமையானது நமக்கு எதிர்காலத்தில் என்ன நடந்துவிடும் என்கின்ற பயம்தான். நோயைவிட "பயம்" வெகு விரைவில் நம்மை கொன்றுவிடும்.
அப்படியாக இவ்வாறு கனவு வருகிறது என்றால் அதை அவ்வாறே மறந்து விடுங்கள். எல்லாவற்றையும் இறைவன் பாதத்தில் அர்ப்பணித்து நடப்பதும், நடக்கப் போவதும் அவளுடைய செயல் என்று அவனை நம்பி விடுங்கள் எல்லாம் சுபமாக முடியும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |