ஜோதிடம்: விநாயகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த 3 ராசிகள் யார் தெரியுமா?
இந்து மதத்தில் நாம் எந்த ஒரு காரியம் தொடங்கும் முன்னர் கட்டாயம் விநாயகப்பெருமானை வழிபாடு செய்து தான் தொடங்குவோம். அவரை வழிபாடு செய்து தொடங்கும் காரியம் எதுவும் தடங்களில் முடியாது என்பது நம்பிக்கை. அப்படியாக, விநாயகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் யார் என்று பார்ப்போம்.
மேஷம்:
செவ்வாய் பகவான் ஆளும் மேஷ ராசிக்காரர்கள் இயல்பாகவே மிகவும் துணிச்சல் மிகுந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் விநாயகரை வழிபாடு செய்து எந்த ஒரு காரியம் தொடங்கினாலும் அவர்களுக்கு அவை நல்ல முடிவை பெற்றுக் கொடுக்கும். இவர்கள் பிற கடவுள்களை காட்டிலும் விநாயகரைப் பற்றிக்கொண்டால் அவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றிகள் குவியும்.
சிம்மம்:
சூரியனை ஆளும் சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையும் மன தைரியமும் கொண்டவர்கள். விநாயகர் ஞானத்திற்கும், தன்னம்பிக்கைக்கும் கடவுள். ஆக, சிம்ம ராசிக்காரர்கள் விநாயகரை வழிபாடு செய்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் வளர்ச்சியும் முன்னேற்றமும் கிடைக்கும். அவர்களின் பொருளாதார சிக்கல்கள் விலகும்.
துலாம்:
சுக்கிரன் ஆளும் துலாம் ராசிக்காரர்கள் சண்டையை விரும்பாதவர்கள். இவர்கள் நீதி நேர்மைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பார்கள். விநாயகர் ஞானத்தையும், அமைதியையும் அருள்பவர். ஆதலால் இவர்கள் விநாயகரை வழிபாடு செய்தால் அவர்களுக்கு விநாயகரின் அருளால் வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட கடின காலங்களும் விலகி நிம்மதி கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |