2025 கிருஷ்ண ஜெயந்தி: கிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிடித்த 4 ராசிகள் யார் தெரியுமா?
கிருஷ்ண அவதாரம் பலருக்கும் மிகவும் நெருக்கமான அவதாரம் ஆகும். கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணர் பல லீலைகளையும் அற்புதங்களையும் நிகழ்த்தியவர். அதோடு கிருஷ்ண பகவான் அருளிய பகவத் கீதை பலருக்கும் வழிகாட்டுதலாக இருக்கின்றது.
அப்படியாக கிருஷ்ண பகவானுக்கு பிடித்த சில ராசிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்பொழுதும் கிருஷ்ண பகவானுடைய அருள் இருக்கும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு எப்பொழுதும் கிருஷ்ண பகவானின் அருள் இருக்கும். மேலும் இந்த ராசியில் பிறந்த பலருக்கும் தன்னுடைய இஷ்ட தெய்வமாக கிருஷ்ண பகவான் இருப்பதையும் நாம் பார்க்கலாம். இந்த ராசியினர் கிருஷ்ணரை போல் தனித்துவமான குணம் கொண்டிருப்பார்கள். அவ்வப்போது கிருஷ்ணரை போல் இவர்கள் குறும்புகள் செய்வதையும் காணலாம்.
மிதுனம்:
பொதுவாக மிதுன ராசியிடம் குழந்தை தன்மையும் கிருஷ்ண பகவானை போல் பக்குவமாக பேசும் ஆற்றலையும் நாம் காணலாம். இவர்களுக்கு கிருஷ்ண பகவானுடைய அருள் எப்போதும் இருக்கும். கிருஷ்ணரை போல் குறும்பும் அறிவும் ஞானமும் அதிகம் பெற்ற ராசியினர் மிதுன ராசியினர். இவர்கள் வாழ்க்கையில் கிருஷ்ணரை பற்றிக்கொண்டால் வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றியை பெறுவார்கள்.
கும்பம்:
கும்ப ராசியினர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். இவர்கள் வாழ்க்கையில் சரியான பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள். மேலும், பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் சொன்னது போல் தர்மத்தையும் தன்னுடைய கடமையிலும் சரியாக செய்து வாழ நினைப்பவர்கள். கும்ப ராசியினருக்கு கிருஷ்ண பகவானின் அருளும் ஆசீர்வாதமும் எப்பொழுதும் இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







